அலகாபாத் : ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
புதிய நடவடிக்கையின் பின்னணி:
உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் பதவி ஏற்ற பிறகு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிப்படி சட்ட ஒழுங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரேதசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் குறித்து ஆபாச கருத்துக்களை வெளியிட்ட இளம் தம்பதியரை மாணவர்கள் பொது இடத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் ஈடுபட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான அகிலேஷின் திட்டங்கள் :
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி எண்ணான 1090 திட்டத்தை அகிலேஷ் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அவசர தொலைப்பேசி எண் திட்டத்தின் கீழ் இது வரை 61,000 அழைப்புகள் பெறப்பட்டு, பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 தொலைப்பேசி அழைப்புகள் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வந்த ஆபாச அழைப்புகள் ஆகும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை :
டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து பெரில்லி கோர்ட் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தாலும் இது போன்று தண்டனை பெறும் குற்றங்களும், வெளியே தெரிய வரும் சம்பவங்களும் மிக மிக அரிது என அரசு தரப்பு வழக்கறிஞர் தயாகி தெரிவித்துள்ளார். இருப்பினும் இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் நாட்டில் பாலியல் வழக்குகளில் பெரும்பாலானவற்றில் சாட்சியங்கள் இல்லை என்ற பெயரில் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து எளிதில் தப்பித்து விடுகின்றனர்.சாட்சிகளை வைத்து கொண்டு பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை.இதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து இந்நாட்டில் நடை பெற்று வருகின்றன.எங்கோ ஒரு இடத்தில் மட்டும் துணிந்து போராடுகின்றனர்.மற்ற இடங்களில் யாருக்கோ ஏற்பட்ட அவலம் என்ற அளவில் மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்து விடுகின்றனர்.எனவே பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட இந்திய தண்டனை சட்டத்தில் உரிய திருத்தம் செய்தால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும்...
வரவேற்கிறோம் ஆனால் இதையும் தவறாக பயன்படுத்த கூடாது - காரணம் டெல்லியில் பாலியல் பலாத்தகாரம் நடந்துவிட்டது என்றால் பெண்ணின் கர்ப்பிர்க்கு மிக பெரிய அளவில் மரியாதை கொடுக்கப்பட்டு நாடு முழுக்க எல்லோரும் ஏன் இப்படி இந்த கொடுமையை செய்கிறார்கள் செய்தவர்களை தூக்கில் போடவேண்டும் என்றும் பலத்த குரல்கள் ஒலிக்கின்றன -தமிழகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு கொலைகுற்ற வழக்கு மட்டும் பதிவு செய்து இந்த பிரட்சினையை அப்படியே மூடிவிட நினைக்கிறது - அப்படி என்றால் கற்பு என்பது இந்தியாவில் டெல்லியில் மட்டும்தான் உள்ளதா ???? இந்திய பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் இப்படித்தான் நினைக்கின்றனவா - இதே நேரம் கருணாநிதி ஆட்சியில் இருந்து இருந்தால் டெல்லி சம்பவத்தையும் தமிழகத்தில் நடந்துள்ள சம்பவத்தையும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பி இருப்பார்கள்
நாராயணன் பெண்கள் தேசத்தின் கண்கள். உங்க குடும்ப பெண்ணுக்குத்தான் நடந்திருக்கு. இந்தியர் நாம் எல்லோரும் ஒரே குடும்பம். இந்த உணர்வு இருந்தா தேச பாதுகாப்பும் குற்றவாளி நாட்ட ஆள்வதும் தானா மறைந்திடும். ஷங்கர், முருகதாஸ் படமும் விக்ரம் விஜயின் ஆக்ஷனும் பார்த்து ரசிப்பது மட்டுமல்ல ஹிக்ஹ்குர்ட் ராமசாமி அரவிந்த் கேசரிவால் சப்போர்ட் பண்ணவும் யோசிங்க , பொதுவாத்தான் சொல்றேனா நாமளா கலாயிகாதீங்கண்ணா ......
அப்ப தேசப்பாதுகாப்பைவிட, தீவிரவாத சட்டம் இயற்றிடலாமே... ஒரு விஷயம் கிருஷ்ணா சார்.. கேஜரிவால்... இன்னும் எனக்கு அவர்மீது நம்பிக்கை வரவில்லை. ஊழலை வெளி கொண்டு வருகிறேன் என்று சொல்லி ஆரம்பித்தவர், என்று 1990 ல் நடந்த ஒரு செய்தியை.. ஒழுங்காக கண்டுபிடிக்காமல் அரைகுறையாக எடுத்து பாஜக மீது பழி சுமத்தினாரோ, அன்றே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுத்து. இன்னும் சொல்லப் போனால், அவர் செய்த செயலால் பெரிய ஊழலான நிலக்கரி ஊழலும், 2G ஊழலும் பற்றி பேச்சே காணோம்.. இப்போ, அவர் எந்த ஊழலும் வெளி கொண்டுவரவில்லையே... அப்படியென்றால் இந்தியாவில் ஊழலே நடக்கவில்லையா? அல்லது அவருக்கு தெரியவில்லையா... விடுங்க.. அவரைப் பற்றி ஒரு செய்தி வந்தால் மேலும் சில கருத்துக்களை சொல்லுகிறேன்....
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷுக்கு ஓ போடுங்கோ ... ராகுல் காந்தி எந்த தெருக்குழாயில் குளிசிடிருக்கீங்க எந்த குடிசையில் டீ குடிச்சிடிருக்கீங்க கொஞ்சமாவது அகிலேஷ் மோடி ஜெயலிதா போல யதார்த்த அரசியல் பண்ணுங்க கருணாநிதிதான் உங்க ரோல் மாடல் சிதம்பரம் திக்விஜய்தான் உங்க அட்வைசொர்னு நினைசீங்கனா அமேதி கூட அம்பேல் ஆயிடுங்கன்னா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.