அலகாபாத் : ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி எண்ணான 1090 திட்டத்தை அகிலேஷ் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அவசர தொலைப்பேசி எண் திட்டத்தின் கீழ் இது வரை 61,000 அழைப்புக்கள் பெறப்பட்டு, பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 தொலைப்பேசி அழைப்புக்கள் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வந்த ஆபாச அழைப்புக்கள் ஆகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.