விருத்தாச்சலம்: விருத்தாச்சலத்தில் காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கடந்த 24ம் தேதி காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது. இச்சம்பவம் தொடர்பாக, இன்று முத்து (22), சக்தி என்ற சுடலை (22), ராஜசேகர் (22), ஏழுமலை (18), வெட்டு சங்கர் (26) மற்றும் கல்லூரி மாணவர் அமுல்ராஜ் என்ற அந்தோணி (24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்களை கடுமையாக வேகமாக தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது..
ஆனால் அதே சமயம் ஏன் நாடு முழுதும் இப்பேற்பட்ட பேர்வழிகள் அதிகரிக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.. எது அவர்களை இப்படி மிருகம் போல செயல் பட வைக்கிறது ? ஒழுக்கம் நேர்மை உண்மை என்பதெல்லாம் ஏதோ இளிச்சவாய தனம் என்பது போல ஒரு மாயை இப்போது எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது .. செல்போனில் எதற்கு கேமரா இன்டர்நெட்? பெற்றோர் தங்கள் குழந்தைகள் மேல் கட்டுப்பாடு வைப்பதை தவிடு பொடியாக்குவது செல் ப்னும் இண்டர்நெட்டும் தான் .. பின்னர் இருக்கவே இருக்கிறது கேவலமான சினிமா,சீரியல் மற்றும் டாக் ஷோ ..யாரும் இதன் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை..பணம் தான் வாழ்க்கை எல்லாவற்றையும் வேகமாக அனுபவிக்க வேண்டும் என்பது போன்ற மடத்தனங்கள் ஒழிய வேண்டும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.