தூத்துக்குடி: பள்ளி மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து தி.மு.க., சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரையடுத்த கிளாக்குளத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு பள்ளி மாணவி புனிதா (13) கடந்த 20ம் தேதி சுப்பையா என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடி மற்றும் நெல்லை தி.மு.க., சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., துணைப்பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், கனிமொழி எம்.பி., நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்ன செய்ய... தமிழக அரசு உடனடியாக கொலை செய்தவரை கைதுசெய்துவிட்டது... அரசு சார்பில் 1 லட்ச ரூபாயும், அதிமுக சார்பில் 1 லட்ச ரூபாயும் கொடுத்தாகிவிட்டது... திமுக ஒன்னும் செய்யலேன்னு யாரும் சொல்லக் கூடாது இல்ல.. அதனால் ஆர்பாட்டம்.. எல்லாம் முடிந்தவுடன் இவங்க என்ன ஆர்பாட்டம் செய்யலையானு யாரும் கேக்கக் கூடாதுன்னு, கட்சி சார்பற்ற போராட்டம் என்று சொல்ல வேண்டி உள்ளது.. மேலும், கட்சி சார்பில் என்றால், அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் யாரும் காணோம்ன்னு சொல்லுவாங்க... அதனால்தான் இந்த மழுப்பல்.
"இது தி.மு.க., சார்பில் நடத்தப்படும் போராட்டமாக யாரும் கருத வேண்டாம். கட்சி சார்பற்ற முறையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது." " இந்த படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடி மற்றும் நெல்லை தி.மு.க., சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., துணைப்பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், கனிமொழி எம்.பி., நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்." இந்த போராட்டம் கட்சி சார்பற்ற போராட்டமா?இல்லை கட்சி போராட்டமா? யாருக்காவது புரிந்தால் தெரியபடுத்தவும்.இந்த தி.மு.க குடும்பத்திற்கே ஒரு புதிய நோய் ஒன்று தொற்றி உள்ளது.என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது.மக்களுக்கும் புரியாது.இதற்க்கு என்ன பெயர் என்று தமிழினத் தலைவரிடம்தான் கேட்ட்கவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.