தூத்துக்குடி: தூத்துக்குடி பள்ளி மாணவி புனிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா உண்மையான குற்றவாளி தானா என்பதே தெரியவில்லை என தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசினார். பள்ளி மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து தி.மு.க., சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க., எம்.பி., கனிமொழி, "தூத்துக்குடி அருகே பள்ளிக்குச் செல்லும் வழியில் 13 வயது மாணவி புனிதா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு எதிராக தற்போது தி.மு.க., போராட்டம் நடத்தி வருகிறது. இது தி.மு.க., சார்பில் நடத்தப்படும் போராட்டமாக யாரும் கருத வேண்டாம். கட்சி சார்பற்ற முறையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இறந்த பெண்ணின் தாயை நாங்கள் சந்தித்த போது அவருக்கு என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை. தனது மகள் தனக்கு திரும்ப வேண்டும் என அவர் கேட்கிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறந்த அந்த பெண்ணை திரும்ப பெற முடியுமா? தற்போது சுப்பையா என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர் தான் உண்மையான குற்றவாளியா என்பது கூட தெரியவில்லை" என பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக காவல்துறை இதற்காகவே இவரைக் கைது செய்யலாம். உண்மைக் குற்றவாளி யார் என்று தெரிந்தால், காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அதை மறைத்த குற்றத்தைச் செய்தவராகிறார். தெரியவில்லை என்றால் சந்தேகத்தின் பேரில் வழக்கு குறித்துக் கருத்துத் தெரிவிப்பது ( அதுவும் ஊடகங்களுக்குத் தகவல் கொடுப்பது / பேட்டியளிப்பது ) வழக்கைத் திசை திருப்பும் நடவடிக்கையாகக் கருதப்படும். அதற்கும் காவல்துறை கைது செய்து விசாரிக்கலாம்
\\\\ போராட்டம் நடத்தி தமிழ் மக்களும் மானம் சூடு உள்ளவர்கள் என காட்டியதற்கு நன்றி...//// தமிழனுக்கு அதெல்லாம் இருந்திருந்தா இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு, இனப்படுகொலைக்கு உதவியவர்களுக்கு, தமிழ்ப் பெண்கள் சிங்களப் பேரினவாதிகளால் கற்பழிக்கப் பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டே - இங்கே பதவிகள் பெற்று சுகம் அனுபவித்தவர்களுக்கு அறவே பிரதிநிதித்துவம் (MLA, MP) கொடுத்திருக்க மாட்டான்...
இந்த குழந்தைக்காக நீங்கள் இவ்வளவு இறங்கி வந்து போராடுறது பாராட்டப்பட வேண்டிய விசியம் தான். இதற்கு முன்பு எவ்வளவோ பிரச்சினைகள் நாட்டில் நடந்த போது வெளியில் வராத நீங்கள் இதற்க்கு மட்டும் வந்து போராடுறது,நாட்டின் தலைநகரத்தில் இதே போல பிரச்சினையை வைத்து அரசியல் செய்துக்கொண்டு உள்ளார்கள். அதுபோல நீங்கள் இங்கு அரசியல் செய்கிறிர்களோ என்று எனக்கும் சந்தேகமாக உள்ளது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.