Eyewitness says constable collapsed, he wasn't beaten up | தாக்கப்பட்டாரா; மயங்கி விழுந்து இறந்தாரா? போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை| Dinamalar

தாக்கப்பட்டாரா; மயங்கி விழுந்து இறந்தாரா? போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை

Updated : டிச 26, 2012 | Added : டிச 26, 2012 | கருத்துகள் (12)
Advertisement
Eyewitness says constable collapsed, he wasn't beaten up தாக்கப்பட்டாரா; மயங்கி விழுந்து இறந்தாரா? போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை

புதுடில்லி: மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு, டில்லியில் நடந்த போராட்டத்தில், போலீஸ்காரர் ஒருவர் இறந்தது தொடர்பாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. டில்லியில் ஓடும் பஸ்சில் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மருத்துவ மாணவி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக டில்லியில் மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா கேட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் சுபாஷ் சந்த் தோமர் என்ற போலீஸ்காரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, போராட்டக்காரர்கள் 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. போராட்டத்தின் போது அப்பகுதியில் இருந்த யோகேந்திரா என்ற மாணவர், போராட்டக்காரர்கள் தாக்கியதில் தோமர் இறக்கவில்லை என்றும், அவர் நடந்து செல்லும் போது மயங்கி விழுந்து காயமடைந்தார் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோமரை தான் போய் பார்த்ததாகவும், அவருக்கு உடலில் காயங்கள் ஏதுமில்லை என்றும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தனக்கு ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தாக்கியதாலேயே தோமர் இறந்ததாக டில்லி போலீசார் கூறி வரும் நிலையில், யோகேந்திராவின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோமர் மயங்கி விழுந்ததை டி.வி., நிறுவனம் ஒன்று எடுத்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், "யோகேந்திரா ஒரு ஜெர்னலிசம் மாணவர். தோமர் மரணத்தில் ஒரு நேரடி சாட்சி. அவரின் கருத்து போலீசார் கூறியதற்கு எதிராக உள்ளது. அப்படியென்றால் போலீசார் பொய் சொல்கிறார்களா" என கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா கூறுகையில், போலீசார் உண்மையை மூடி மறைத்து அதை அரசியலாக்கப்பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் டில்லி போலீசார் சதி செய்வதாகவும், கமிஷனர் நீரஜ் குமார் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் எனவும் சிசோடியா கோரிக்கை விடுத்தார். இது ஒருபுறமிருக்க, தோமரின் வயிற்றுப்பகுதி, மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் காயங்கள் இருப்பதாகவும், போஸ்ட் மார்டம் அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
27-டிச-201219:24:37 IST Report Abuse
kamarud எப்படியோ தோமர் போய் சேர்ந்து விட்டார் இனியாவது மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் வன்முறை ல் இறங்காமல் அடக்கி வாசிப்பார்களா ????
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
27-டிச-201200:18:11 IST Report Abuse
Sundeli Siththar இது வரை வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் போலிஸ் சொல்லுவது தவறு என்றே நினைக்க தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
26-டிச-201216:46:52 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) முன்பு தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே விசயத்திலும், நம் நாடினர் மீதே பழியை போட்ட பாகிஸ்தான் அனுதாபிகள், இப்பொழுதும் அதேபோல கதை கட்டி விட பார்த்தார்கள்...
Rate this:
Share this comment
Cancel
tamilnambi - new delhi,இந்தியா
26-டிச-201216:27:22 IST Report Abuse
tamilnambi தமிழ்நாட்டில் 12 வயது பெண் புனித கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு இருக்கிறார் - இதை பெரிதாகாவே எடுத்துக்கொள்ளவில்லை பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும் - சென்னையில் இரவிலும் பகலிலும் போராட்டம் நடத்திய சினிமாகாரர்கள் கூட டெல்லியில் நடந்ததை முக்கியமாக கொண்டு குரல் கொடுத்தார்களே தவிர - தமிழகத்தில் நடந்துள்ள கொடூரத்தை பற்றி வாய் திறக்கவில்லை - கற்புக்கு முக்கியத்துவம் என்பது இவர்களை பொறுத்தவரையில் டெல்லிக்கு மட்டும்தான் போலும் - தமிழக பத்திரிக்கையார்களின் குடும்பம்கள் தமிழகத்தில் தான் உள்ளது - டெல்லியில் இல்லை டெல்லி சம்பவத்தை தினமும் எழுதிவரும் இவர்கள் தமிழகத்தை பற்றி எழுத மனம் இல்லை போலும். அம்மா குஜராத் சென்றுள்ளதை மிக அழகாக வெளியிடுகிறார்கள் - தமிழகத்தில் பெண்ணின் கற்ப்புக்கு விலை ஒரு லட்சம் அம்மா கொடுத்து விட்டார். வாழ்க தமிழக பத்திரிக்கைகள்
Rate this:
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
26-டிச-201217:59:48 IST Report Abuse
மும்பை தமிழன்சோனியா இருக்கும் வரை தமிழருக்கு மரியாதை இருக்காது...
Rate this:
Share this comment
Venkat Iyer - Mumbai,இந்தியா
27-டிச-201200:44:11 IST Report Abuse
Venkat Iyerபெண் கற்பழிக்கப்படுவது என்பது கொடுமையானது .இதில் தலித் பெண்,தமிழ் பெண், டெல்லி பெண் என்ற பேதம் ஏன்?டெல்லி - யில் போராடினாலும், அதனால் சட்டத்தில் வரும் திருத்தங்கள் எல்லோருக்கும் போது.....
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
26-டிச-201216:23:09 IST Report Abuse
K.Balasubramanian மீடியா சானலில் காட்டப்பட்ட காட்சிகள் தகுந்த வல்லுனர்களால் ஆய்வு செய்ய பட்டால் மருத்துவ அறிக்கையுடன் உண்மை தெரிய வாய்ப்பு உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Saikannan Kannan - avinashi,இந்தியா
26-டிச-201214:51:41 IST Report Abuse
Saikannan Kannan கெஜரிவால் தொண்டர்களை வைத்து இருக்கிறாரா ?? இல்லை குண்டர்களை வைத்து இருக்கிறாரா ???
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
26-டிச-201216:26:19 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..// கெஜரிவால் தொண்டர்களை வைத்து இருக்கிறாரா ?? இல்லை குண்டர்களை வைத்து இருக்கிறாரா ??? /// செய்தியை முழுமையாக உள்வாங்காமல் கருத்து தெரிவித்து உள்ளீர்கள், இது இங்கே அவர் மயங்கி விழுந்தற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.. ஆகையால் இது நம்மூரை போல்.. ஜோடிக்கப்பட்ட வழக்கு... மேலும்.. போராட்டமே தவறா என்ன.. அவர்கள் கேட்டது.. உரிய சட்ட திருத்தம்.. மற்றும் சமூக பாதுகாப்பு.. புரிந்து கொள்ளுங்கள், இந்த போராட்ட்டம் இல்லை இனி, இந்த அளவு சமூக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-டிச-201214:31:21 IST Report Abuse
மதுரை விருமாண்டி இதய நோயாளியாக இருக்க பெரும் வாய்ப்புள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201214:20:31 IST Report Abuse
Guru ஐயோ எதை நப்புவது.., செய்தியை சேகரிக்கும் பத்திரிகை நண்பர்கள் உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
raju kalluri - Dammam,சவுதி அரேபியா
26-டிச-201213:31:59 IST Report Abuse
raju kalluri எல்லா போலீசும் ஆளும் கட்சிக்கு காவடி தூக்குபவர்கள் தான். இப்போது சக போலீசார் மீது சந்தேக பட வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை