Advertisement
சொத்து குவிப்பு வழக்கு: சுதாகரனிடம் 143 கேள்விகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,14:16 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,18:45 IST

பெங்களூரு: "பையனூரில், கங்கை அமரனுக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக, போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, ஜெயலலிதா பேசினாரா என்பது பற்றி எனக்கு தெரியாது' என்று சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன் பதிலளித்தார்.பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், சுதாகரன் ஆஜரானார்.நீதிபதி பாலகிருஷ்ணா கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்:கடந்த, 1994 ல் சென்னையில் கிரீன்பாம் ஹவுஸ் என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. சென்னையிலுள்ள மார்வல் மார்பிள்ஸ் நிறுவனம் பதிவு செய்தது குறித்து ஏதும் தெரியாது. தியாகராய நகரில் வீடு வாங்கியது உண்மை. செய்யூர், சோளிங்க நல்லூர் பகுதியில், சிக்னோரா, லெட்ஸ் டெவலப்மெண்ட் நிறுவனங்களுக்கு, நிலம் வாங்கப்பட்ட போது, அந்நிறுவன இயக்குனராக, நான் இல்லை. எனவே, எதுவும் தெரியாது. அரும்பாக்கத்தில் மஹாலட்சுமி திருமண மண்டபம் வாங்கினேன். திருவான்மியூரில் என் பெயரில் நிலம் வாங்கவில்லை. பையனூரில் கங்கை அமரனுக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக, அவரை அழைத்து, ஜெயலலிதா பேசினாரா என்பது பற்றி தெரியாது.பல இடங்களில் லெட்ஸ் நிறுவனம் நிலம் வாங்கியது உண்மை. இதற்காக பணம் ரொக்கமாக வழங்கப்படவில்லை. டி.டி., யாக தான் வழங்கப்பட்டது. கருங்குழிபள்ளத்தில், என் நிறுவனத்துக்கு நிலம் வாங்கவில்லை. நான் இயக்குனராக இருந்த கிரீன்பாம் ஹவுஸ், லெட்ஸ் நிறுவனம், சிக்னோரா நிறுவனங்களுக்கு நிலம் வாங்குவதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வமில்லை. முறைப்படி வாங்கப்பட்டது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.இன்று முற்பகல், 11 மணியிலிருந்து பகல், 2 மணி வரையிலும் விசாரணை நடந்தது. அடுத்த விசாரணை இன்று நடப்பதாக நீதிபதி அறிவித்தார். மொத்தம், 143 கேள்விகளுக்கு, ஆங்கிலத்தில் சுதாகரன் பதிலளித்தார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
s.maria alphonse pandian - mettur,இந்தியா
26-டிச-201214:48:30 IST Report Abuse
s.maria alphonse pandian இப்படி வெறுமனே சுதாகரன் என்றால் யாருக்கு தெரியும்? ஜெயாவின் "முன்னாள் வளர்ப்பு மகன்" சுதாகரன் என்றால்தானே எல்லோருக்கும் தெரியும்?
Rate this:
8 members
0 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.