கோலாலம்பூர்: மலேஷியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை காரணமாக டெரன்கனு, பஹாங், கெலன்டன் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களிலிருந்து சுமார் 13,746 பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பஹாங் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.