நாகை: காணாமல் போன பலகோடி மதிப்பிலான 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐந்து ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் ஊரில் உள்ளது எழுமேஸ்வர உடையார் கோயில். இந்த கோவிலில் கடந்த 1.4.12 அன்று 6 ஐம்பொன் சிலைகள் களவு போயின. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஏ.எஸ்.பி. சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரை போலீசார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் தான் சிலையை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த கமலக்கண்ணன்(26), திருவாரூரை சேர்ந்த தினேஷ்(23) என்பதும், சிலையை சென்னை மகாலிபுரத்தை சேர்ந்த பத்பநாபன் என்ற கலைப்பொருட்களை விற்பனை செய்து வருபவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பத்மநாபனிடம் இருந்த பெருமாள் சிலை (3அடி), லட்சுமணன் சிலை (3 1/2 அடி), குருவாயூரப்பன் சிலை(1 1/2 அடி), ஸ்ரீதேவி - பூதேவி சிலை (2 அடி) ஆகிய ஐந்து ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர். மேலும் ஒரு சிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.