Nadal out from Abu dabi Tennis | அபுதாபி டென்னிஸ்: நடால் "அவுட்'| Dinamalar

அபுதாபி டென்னிஸ்: நடால் "அவுட்'

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அபுதாபி டென்னிஸ்: நடால் "அவுட்'

மாட்ரிட்: வயிற்று வலி காரணமாக அபுதாபி டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் நடால் விலகினார். டென்னிஸ் அரங்கில் "நம்பர்-4' இடத்தில் உள்ளவர் ஸ்பெயினின் நடால், 26. இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, யு.எஸ்., ஓபன், லண்டன் ஒலிம்பிக் போன்ற தொடர்களில் இவர் பங்கேற்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், இன்று துவங்கவுள்ள, அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் வயிற்று வலி காரணமாக, டாக்டர்களில் அறிவுரைப்படி இத்தொடரில் இருந்து விலகினார்.


இது குறித்து நடால் கூறியது: அபுதாபி தொடரில் பங்கேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். இருப்பினும் வயிற்று வலி காரணமாக இந்த ஆண்டு இத்தொடரில் பங்கேற்ற முடியவில்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி இத்தொடரில் இருந்து விலகுகிறேன். தற்போது முழங்கால் வலி முழுமையாக குணமடைந்து விட்டது. முன்பை விட சிறப்பாக உணர்கிறேன். போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளேன். இவ்வாறு நடால் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை