சென்னை : தூத்துக்குடி மாணவி புனிதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க குஜராத் சென்றாகவும், தூத்துக்குடி மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் இதுபோன்று நடந்து வரும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான குற்றங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.