நாகப்பட்டினம்: நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். நாகையில் இருந்து கிழக்கில் 110 கடல் மைல் தொலைவில் கடந்த 23ம் தேதி நாகை அக்கரைப்பேட்டை ஆறுமுகத்திற்கு சொந்தமான விசைப்படகில் ஏழு பேரும், நம்பியார் நகர் சத்யனுக்கு சொந்தமான படகில் ஏழு பேரும், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த குணசேகரன்,நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் 13 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் நான்கு விசைப் படகுகளையும், துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து படகில் இருந்த 27 மீனவர்களையும் சிறை பிடித்து, இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு திரிகோணமலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 27 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் 27 பேரும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று மாலை 5 மணிக்கு மேல் அங்கிருந்து தங்கள் ஊருக்கு கிளம்புவார்கள் என கூறப்படுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, நாகை மற்றும் புதுச்சேரி பகுதி மீனவ மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.