புதுடில்லி: டில்லி போலீஸ் நிர்வாகத்தை அம்மாநில அரசின் வசம் ஒப்படைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, டில்லி அரசும், போலீசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது மத்திய அரசின் வசம் டில்லி போலீஸ் நிர்வாகம் இருந்து வருகிறது. இதை மாநில அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், டில்லி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை இதுநாள் வரை மத்திய அரசு தான் பாதுகாத்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இத்தகைய நடைமுறையே பின்பற்றப்படுவதால் டில்லி போலீஸ் நிர்வாகத்தை மாநில அரசின் வசம் ஒப்படைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.