Advertisement
நாம ஏன் தோற்றோம்? 10 மாதங்களுக்குப்பிறகு காரணத்தை கண்டுபிடித்தார் திக்விஜய்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,17:54 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,17:56 IST

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலின் போது வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் காங்கிரஸ் தோல்வியடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டிற்கு முன்பாகவே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான மனநிலையை காங்கிரஸ் ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும், ஆனால் ஆட்சியமைப்பது குறித்து உறுதிமொழி அளிக்காததும், வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததுமே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் லோக்சபா தேர்தலில் அவ்வாறு இல்லாமல், ஓராண்டிற்கு முன்பாகவே வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்படும் என்றும், யார் யாருக்கு சீட் வழங்குவது என்பது குறித்த பரிசீலனை தற்போது நடந்து வருவதாகவும், அது முடிந்த பின் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் திக்விஜய் சிங் தெரிவித்தார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு உ.பி.,யில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்த அவர், கூடுதலாக 10 முதல் 12 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் பட்சத்தில் உ.பி.,யில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.


திக்விஜய் சிங் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட கட்சித்தொண்டர் ஒருவர், சிலிண்டர்கள் கட்டுப்பாடு கட்சியின் இமேஜை கடுமையாக பாதிக்கும் என கருத்து தெரிவித்தார். அதை ஆமோதிப்பதாக கூறிய திக்விஜய் சிங், சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். 2ஜி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த அவர், சி.ஏ.ஜி., உள்ளிட்ட நாட்டிலுள்ள அரசியலமைப்பு குழுக்களை தான் மதிப்பதாகவும், சில சமயங்களில் அந்த அமைப்புகளின் அறிக்கை வெளியாகி விடும் போது அதன் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-டிச-201208:48:47 IST Report Abuse
Swaminathan Nath ரொம்ப வருடமாக அங்கு இவர்களுக்கு வாக்கு வங்கி கிடையாது,. நம் கருணா போல் எதாவது காரணம் சொல்ல வேண்டும். இவர்கள் நிற்காமல் முலாயம் கட்சியை ஆதரித்தால் நல்லது,. பின் அவர் வெளியில் இறந்து ஆதரவு செய்வார்,.
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
27-டிச-201207:14:27 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சரி ராகுல் பிரச்சாரம் செய்த தொகுதியில் கூட டெப்பாசிட் போனதற்கு காரணம் கண்டுபிடிச்சுட்டீங்களா?
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
27-டிச-201206:13:29 IST Report Abuse
S.Govindarajan. இவர் முதலில் மத்திய பிரதேச ஆட்சியை ஏன் இழந்தார் என்பதை இவர் ஆராய வேண்டும். முதலில் கண்டபடி அறிக்கை கொடுப்பதையும் உளறுவதையும் நிறுத்த வேண்டும். இப்படியே மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடந்து அமல்படுத்துங்கள். சங்குதான்.
Rate this:
0 members
1 members
13 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
27-டிச-201200:26:36 IST Report Abuse
Sundeli Siththar முதலில் ராகுல் இவரை விட்டு விலகி இருக்கவேண்டும்.... அனுகூல சத்துரு என்பது இவர்தான்.
Rate this:
1 members
1 members
13 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
27-டிச-201200:16:45 IST Report Abuse
Sundeli Siththar அப்ப சின்ன ஐயா கஞ்சி குடிச்சதெல்லாம் என்ன கணக்கு... கஞ்சி குடிச்சு அசர நேரத்தில ஒரு வேட்பாளரை அறிவித்து இருந்திருக்கலாமே...
Rate this:
1 members
0 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.