கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், விரைவில் நடக்கவுள்ள, ஊராட்சி தேர்தலில், திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, காங்கிரஸ் கட்சியினர், அதிரடி வியூகம் வகுத்துள்ளனர். திரிணமுல் கட்சியில், சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை, அதிகாரப்பூர்வ திரிணமுல் வேட்பாளர்களுக்கு எதிராக, களமிறக்கவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், ஆளும் கட்சியாக உள்ள, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, சமீபத்தில் வெளியேறியது.இதனால், இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே, மோதல் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆளும் கட்சியினரால், காங்., நிர்வாகிகள், தாக்கப்படுவது, தொடருகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில், விரைவில் ஊராட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில், திரிணமுல் காங்கிரஸ் பலமாகவுள்ள, மாவட்டங்களில், காங்கிரஸ் சார்பில், போட்டியிடுவதற்கு ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும், திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்பதால், காங்கிரசார் மறுத்து வருகின்றனர்.இந்த பிரச்னையை சமாளிப்பதற்கும், மம்தாவுக்கு பாடம் புகட்டுவதற்கும், மேற்கு வங்க மாநில காங்., தலைவர்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மேற்கு வங்க மாநில, காங்., தலைவர், பிரதீப் பட்டாச்சார்யா கூறியதாவது: திரிணமுல் காங்கிரஸ், ஆளும் கட்சியாக உள்ளதால், அந்த கட்சி சார்பில், போட்டியிடுவதற்கு, ஒரே தொகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள், வாய்ப்பு கேட்பர். ஆனால், ஒருவருக்கு மட்டுமே, திரிணமுல் மேலிடம், வாய்ப்பு கொடுக்கும்.இதனால், சீட் கிடைக்காத பலர், அதிருப்தி அடைவர். இவர்களின் அதிருப்தியை, எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு போட்டியிட, ஆள் கிடைக்காத இடங்களில், திரிணமுல் அதிருப்தியாளர்களை, திரிணமுல் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, களமிறக்க முடிவு செய்துள்ளோம். திரிணமுல் தான், எங்கள் முதல் எதிரி. எங்களின் இந்த புதிய நடவடிக்கை, திரிணமுல் மேலிடத்துக்கு, கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. திரிணமுல் கட்சியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு, எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.இவ்வாறு, பிரதீப் பட்டாச்சார்யா கூறினார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சரும், மேற்கு வங்க காங்கிரஸ் பிரமுகருமான, தீபா தாஸ் முன்ஷி கூறுகையில்,""திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பாவிட்டாலும், அவர்களுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.