புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் போராட்டத்தின் போது பலியான போலீஸ் குறித்து , மருத்துவ அதிகாரிக்கு டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து டில்லியில் கடந்த 8 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதில் போலீஸ் சுபாஷ் தாமேதர் (45) பலியானதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் மாரடைப்பால் பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து டில்லி போலீசார் டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர் டி.எஸ்.சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் வெள்ளியன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.