கடலூர்:காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த பேரூர் காலனியைச் சேர்ந்தவர் தேவநாதன் மகள் சுந்தரி, 19. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராசய்யா மகன் மோகன்குமார், 26, என்பவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
மோகன்குமார், திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் சுந்தரி அவருடன் நெருக்கமாக பழகினார். இதனால் சுந்தரி கர்ப்பமடைந்தார்.
இதனை அறிந்த மோகன்குமார், கர்ப்பத்தை கலைத்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதன்பேரில், சுந்தரி கர்ப்பத்தை கலைத்தார்.
ஆனால், அதன் பிறகும் மோகன்குமார் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மேலும், மோகன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், சுந்தரியை மிரட்
டினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மோகன்குமார் மற்றும் அவரது தாய் தனம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ராசய்யாவை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.