DISTRICT NEWS | தூர் வாரும் திட்டத்தில் ஊழல் என தி.மு.க.,... நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் அறிவிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூர் வாரும் திட்டத்தில் ஊழல் என தி.மு.க.,... நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் அறிவிப்பு

Added : டிச 26, 2012
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் தூர் வாரும் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது என தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். ஊழல் நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் அறிவித்தார்.
சிதம்பரம் நகராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நடந்தது. சேர்மன் நிர்மலா சுந்தர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில்குமார், கமிஷனர் (பொறுப்பு) செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், அலுவலர் ஷேக் முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வராஜ்: எங்கள் வார்டுகளில் நடக்கும் பணிக்கு டெண்டர் விடும் போது எங்களுக்கு தெரிவிக்க வில்லை. பாலமான் ஆற்றில் உசுப்பூர் முதல் பஸ் நிலையம் வரை ஆகாயத் தாமரை மண்டியுள்ளது. பாலமானில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. அதனால் ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும்.
கமிஷனர் (பொறுப்பு): வரும் காலங்களில் வார்டு பணிகள் டெண்டர் விடும் போது தகவல் தெரிவிக் கிறோம். பாலமான் ஆறு பொதுப் பணித் துறைக்கு சொந்தமானது. நாம் அதில் பணிகள் செய்ய முடியாது.
ஜேம்ஸ் விஜயராகவன்: வார்டு 18ல் ரேஷன் கடை திறப்பு விழா அழைப்பிதழில் ஏன் தி.மு.க., கவுன்சிலர் பெயர் போடவில்லை. முன்பு நகர மன்றத்தில் பல விழாக்களில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பெயர் போட்டு தான் அழைப்பிதழ் அடித்தோம். இந்த மரபை ஏன் பின் பற்றவில்லை. அழைப்பிதழில் தி.மு.க., கவுன்சிலர் பெயர் இடம் பெறாததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நகர் முழுவதும் கழிவு நீர் கால்வாயில் மண் அள்ள ஒதுக்கிய 5 லட்சம் ரூபாய் பணிகள் முடிக்காமலே ஒப்பந்ததாரரருக்கு முழு தொகையும் செக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கமிஷனர்: வார்டு 1 முதல் 6 வார்டு வரையும், நகரில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் ஜே.சி.பி., வைத்து தூர் வாரப்பட்டது. அதிகம் தூர் எடுத்ததால் செலவு அதிகம் ஆகிவிட்டது. இதனை செய்த ஒப்பந்ததாரருக்கு முழு தொகை வழங்கப்பட்டுள்ளது.
சேர்மன்: இதில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பு சந்திரசேகரன்: எனது வார்டில் டெண்டர் விடப்பட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை. நடராஜர் கோவிலில் நடக்கும் ஆரூத்ரா தரிசனத்திற்கு வெளியூர்களில் இருந்து வருவர். தற்போது எங்கும் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் உள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் முகாம் அமைத்து திருவிழாவிற்கு வருபவர்களுக்கு தடுப்பு ஊசி போட வேண்டும்.
கமிஷனர்: வார்டில் பணிகள் விரைவில் துவக்கப்பட்டு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலாளர் ராமஜெயம்: ஆரூத்ரா தரிசனம் குறித்து சப் கலெக்டர் கூட்டம் நடந்தது. அதில் தடுப்பு ஊசி, நோய் கட்டுப்படுத்துவது போன்றவைகளை சுகாதாரத் துறை நேரடியாக பார்த்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி சார்பில் நான்கு வீதிகளும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சுகாதாரப்பிரிவு பணிகள் நமக்கு வேண்டாம்.
ராஜன்: பழைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு இருந்த போது, கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இல்லை. புதிய கலெக்டர் வந்ததும், அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படு கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.
சேர்மன் : பிளாஸ்டிக் தடை நடைமுறையில் உள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
ரயில்வே மேம்பாலம் கட்ட இடம் கொடுத்த கடைக்கார்களுக்கு மாற்று இடமாக வீட்டு வசதி வாரிய இடத்தில் ஒதுக்கி தரலாம் என்ற 2வது தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு நகராட்சி நிர்வாகம் நிதி ஆதாரம் இல்லை என கூறி கைவிட கூறப்பட்டது. தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் பேரில் 2வது தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை