புதுடில்லி: பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் இல்லை என திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங்அலுவாலியா கூறினார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்குகிறார். முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் , பிரதமர் மன்மோகன்சிங்கை கடந்த வாரம் சந்தித்த, பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவ சிறப்பு அந்தஸ்துதர வேண்டும் என கடிதம் வழங்கி வலியுறுத்தினார்.
இது குறித்து திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாக கூறுகையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அளவிற்கு , மத்திய அரசின் பட்டியலில் பீகார் இடம் பெறவில்லை. சில பிரச்னைகள் உள்ளன. பீகார் மட்டுமல்லாது அருணாச்சல்,அசாம், இமாச்சல், மணிப்பூர், மேகாலயா , மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தர்க்காண்ட் ஆகிய மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிவருகின்றன. ஆயினும் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது குஜராத் மாநிலத்தை காட்டிலும் பீகார் வளர்ச்சி அடைந்துள்ளது.அதற்காக பீகார் மாநிலத்தை தனிமைப்படுத்தும் நோக்கம் இல்லை. வரும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் 8.2 சதவீதம் வளர்ச்சி எட்டியுள்ளது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.