தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை :  கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு

தூத்துக்குடி: ""பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக'' தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி குற்றம் சாட்டினார். செய்துங்கநல்லூர், கிளாக்குளம், 7ம்வகுப்பு மாணவி புனிதா, கற்பழிக்க முயன்று கொலை செய்யப்பட்டதைக்கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, தி.மு.க., மகளிரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சி துணைபொதுச்செயலர் சற்குண பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் பெரியசாமி(தூத்துக்குடி), கருப்பசாமி பாண்டியன்(நெல்லை), மாணவரணி மாநில செயலர் இள.புகழேந்தி முன்னிலை வகித்தார்.

அதில், கனிமொழி எம்.பி., பேசியதாவது: புனிதாவை இழந்த அந்த தாயின் மனது எப்படியிருக்கும் என அனைவரும் சிந்திக்கவேண்டும். ஆனால், தமிழக அரசு இப்படுகொலையைப்பற்றி கவலைப்படவில்லை. பலகோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும், அத்தாயிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய முடியாது. அரசின் மெத்தனப்போக்கால்தான், புனிதா படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும். அதற்காக, அனைவரும் ஒன்றாக திரள வேண்டும்.இப்படுகொலையில் சுப்பையா மட்டும்தான் உண்மைக்குற்றவாளியா? வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? எனத்தெரியவில்லை. புனிதாவின் வீட்டிற்கு நான் சென்று ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கியபின், அமைச்சர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். இதில் ஏன், ஏட்டிக்கு,போட்டி. இப்பிரச்னையில் அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. அனைவரும் இணைந்து போராட வேண்டிய நேரமிது. இப்படுகொலைக்கு அரசும், சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். தூத்துக்குடி மட்டுமின்றி கடலூர், சேலம் என பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்துவருகின்றன. பெண்களை தைரியமாக வெளியே அனுப்ப முடியாத நிலை தற்போதுள்ளது. . 15,16 வயதுக்கு கீழுள்ள பெண்களில் 25 சதவீதத்தினர் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல் உள்ளது. கடமையை செய்யாத அரசை மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மொத்தத்தில், பெண்களுக்கு அடிப்படை பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. புனிதாவின் தாயிற்கு சேர்ந்த சோகம், வேறு எந்த தாயிற்கும் நேரக்கூடாது. அதற்காக, இந்த அரசிற்கு தக்க பதிலடி தரவேண்டும். தமிழகத்தில், கடந்தாண்டு பாலியல் வன்முறை தொடர்பாக, 6,940 வழக்குகள் பதிவாயின. ஆனால், அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைத்தது எனத்தெரியவில்லை, என்றார். தூத்துக்குடி எம்.பி.,ஜெயதுரை, எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மைதீன்கான், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
27-டிச-201210:40:26 IST Report Abuse
MOHAMED GANI இந்த போராட்டத்தில் பேசிய கனிமொழி இப்போராட்டம் ஒவ்வொரு கட்சியினருக்கும் குடும்பத்தினருக்குமான போராட்டம் என்றும் எனவேதான் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கலந்து கொண்டுள்ளார்கலேன கூறினார்...பட்ட பகலில் பள்ளிக்கு சென்று திரும்பிய ஒரு பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இச்சம்பவம் இப்படி முறையாக கண்டிக்கப்பட்டால் குற்றம் செய்வோருக்கும்...காவல்துறைக்கும் ஒரு விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படும்...
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
27-டிச-201205:44:12 IST Report Abuse
s.maria alphonse pandian தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டதை வெளியிட்ட தினமலருக்கு நன்றி....இந்த போராட்டத்தில் பேசிய கனிமொழி இப்போராட்டம் ஒவ்வொரு கட்சியினருக்கும் குடும்பத்தினருக்குமான போராட்டம் என்றும் எனவேதான் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கலந்து கொண்டுள்ளார்கலேன கூறினார்...பட்ட பகலில் பள்ளிக்கு சென்று திரும்பிய ஒரு பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இச்சம்பவம் இப்படி முறையாக கண்டிக்கப்பட்டால் குற்றம் செய்வோருக்கும்...காவல்துறைக்கும் ஒரு விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படும்...
Rate this:
Share this comment
Cancel
shanmugam suresh - Singapore,சிங்கப்பூர்
27-டிச-201205:38:57 IST Report Abuse
shanmugam suresh பரவயில்லையே ஸ்டாலினை அமுக்க, அப்பா மாதிரி அடிகடி கருத்து வெளியிடுறிகளே...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201203:00:01 IST Report Abuse
தமிழ்வேல் // புனிதாவின் வீட்டிற்கு நான் சென்று ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கியபின், அமைச்சர் ஒருவர் அங்கு சென்றுள்ளார் //. இங்கு காக்கா விற்கும் பணம்பழத்திர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
27-டிச-201202:28:59 IST Report Abuse
Panchu Mani யாருக்கும் எங்கேயும் பாதுகாப்பில்லை. நீங்களும் இப்போதைக்கு டெல்லி பக்கம் போவாதீங்க. ஒரே போராட்டம் , பிரச்சனைன்னு இருக்கு. நீங்க இப்படியே பிரச்சனை முடியற வரை தூத்துக்குடி, ஊத்துகுழி, அமைஞ்சிகரைன்னு ஊர் ஊரா போராட்டம் நடத்திகிட்டு இங்கயே இருங்க. அதான் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
27-டிச-201202:24:10 IST Report Abuse
Kadaparai Mani ஒரு புள்ளி விவரம் (://www.hindu.com/2010/05/08/stories/2010050863121000.htm). 2007இல் தமிழகத்தில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 523, அதுவே 2009 இல் 596. 2006 முதல் 2011 வரை கருணாநிதி தான் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் .... இதில் எத்தனனை முறை பதிக்கப்பட்ட பெண்களிடம் கலைஞர் ஆறுதல் சொல்லி இருக்கிறார் .ஆங்கில பதிப்பை கற்றரிண்டவர்களுக்காக கொடுத்து உள்ளேன் .Saturday, May 08, 2010 Rape cases on the rise Special Correspondent CHENNAI: While cases of cruelty against women in the State have generally come down in the past two years, the number of rape cases has gone up substantially. The Home Department's policy note which was d in the Assembly on Friday revealed that the number of rape cases reported had gone up from 523 in 2007 to 596 in 2009. While the number of cases charge sheeted was 432 in 2007, it was only 269 in 2009. இந்த சம்பவத்தில் ஒரு பொதுவான கண்ணோட்டம் தேவை .
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
27-டிச-201201:50:12 IST Report Abuse
Panchu Mani டெல்லி நகரில் நடக்கும் போராட்டத்தின் காரணமாக உள்துறை செயல் இழந்து நிற்கிறது. உள்துறை நிலை குழு உறுப்பினராக இருக்கிற கனி டெல்லியில் அமர்ந்து மத்திய அரசின் சார்பாக பதில்கள், ஆலோசனைகள் சொல்ல வேண்டியவர் இங்கே உட்கார்ந்து கொண்டு சுப்பையாவோடு சேர்ந்து எத்தனை பேர் செய்தார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டு இந்த கொடுமை நிகழ்ந்தது போதாது என்று இவர் வேறு அந்த தாயின் வெந்து போன மனதில் வேல் பாய்ச்சுகிறார். அதிலும் உச்ச கட்ட கொடுமை கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஒருவரே இந்த போராட்டத்தில் தலை காட்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
27-டிச-201201:43:52 IST Report Abuse
குடியானவன்-Ryot தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறதே அப்புறம் எதுக்கு திகார் சிறைசாலையில் இருந்து வெளியே வர பலமுறை மனு போட்டீர்கள், பேசாம திகார் சிறைசாலையிலேயே இருக்கவேண்டியதுதானே....
Rate this:
Share this comment
Nour Ibraguime - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-டிச-201219:29:39 IST Report Abuse
Nour Ibraguimeஉங்கள் கருத்துடன் எல்லோரும் ஒத்து போகவேண்டியதுதான் முறை ...
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
27-டிச-201201:30:24 IST Report Abuse
Sekar Sekaran இதனை அனந்த நாயகி என்கிற காங்கிரஸ் தலைவர் "என்றைக்கோ" சொல்லி விட்டார்..அதுமட்டுமா..? "துச்சாதன" வேலைகளையும் சட்டமன்றத்திலேயே செய்த படுபாவிகளை என்னென்பது? கனியின் கூற்று திமுக தலைவர் ஆட்சி செய்த காலகட்டத்தில் நடந்தவை. அப்போது ஆரம்பிக்கப்பட்ட ஒன்று..இப்போது அது பாலியல் வன்முறையாக நடந்தேறுகின்றது..வழிகாட்டி யார் என்று கனிக்கு இப்போது புரிந்திருக்குமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.