சென்னை: நானி பல்கிவாலா மத்தியஸ்த மையத்தில், 2.2 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை, நேற்று அம்மையத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். மரபு சாரா எரிசக்தியை, ஊக்குவிக்கும் வகையில், சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தியை பெருக்கும் திட்டங்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு, அக்@டாபர் மாதம், புதிய சூரிய சக்தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை, சூரிய சக்தியில் உற்பத்தியாகும், மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயம் ஆகியவை, புதிய கொள்கையில் இடம்பெற்றன. அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள், சூரிய சக்தி மின் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சென்னை, மயிலாப்பூரில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நிறுவனங்களுக்கு இடை@யயான பிரச்னைகளை தீர்த்து வைக்கும், நானி பல்கிவாலா மத்தியஸ்த மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், 2.2 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை அமைத்துள்ளது. இதை, நேற்று அம்மையத்தின் இயக்குனர், சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஐகோட்டு மூத்த வழக்கறிஞர் ராஜா, வி.டி.சோலார் நிறுவனத்தின் இயக்குனர் விஜய் பாலாஜி, பொது மேலாளர் உமேஷ் மற்றும் நானி பல்கிவாலா மத்தியஸ்த மைய இயக்குனர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.