தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, ஏழாம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்று, கொலை செய்தவன், நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி, கிளாக்குளம், சவுந்தரராஜன் மகள் புனிதா; ஏழாம் வகுப்பு மாணவி. டிச., 20ம்தேதி காலை, பள்ளி சென்ற இவரை, தாதன்குளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காட்டுப்பகுதியில், சுப்பையா, 37, என்பவன், கற்பழிக்க முயன்று, கழுத்தை நெரித்து கொலை செய்தான். அவனை கைது செய்த போலீசார், மதுரை மத்திய சிறையிலடைத்தனர். சுப்பையா மீது, நவ., 1ம் தேதி, சித்தி மகள் பூர்ணகலாவிடம், தவறாக நடக்க முய ன்ற வழக்கு, அதன் தொடர்ச்சியாக, டிச., 17ல், சித்தி மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிய, கொலை முயற்சி வழக்குகள், மணியாச்சி போலீசில் உள்ளன. புனிதா கொலையோடு சேர்த்து, இவன் மீது, இம்மாவட்டத்தில், இதுவரை, மூன்று வழக்குகள் பதிவாயின. இதுதவிர, நெல்லை மாவட்டத்திலும் வழக்குகள் உள்ளன. இதனிடையே, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களிடையே அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் சுப்பையாவை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ராஜேந்திரன், தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு பரிந்துரைத்தார். அதை ஏற்று, கலெக்டர் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவனல்லாம் தாராளமா என்கவுண்டர் செய்யலாம், அல்லது ஆண்மையை நீக்கும் ஊசியை போட்டு விடலாம். நேத்து ஒரு செய்தி, 2 வயது பெண் குழந்தையை அதன் தாய்மாமன் சீரழித்து புதரில் வீசி விட்டான், அக்குழந்தை இறந்து விட்டது, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போதும். சட்டங்கள் கடுமையாக்க வேண்டிய நேரமிது, மதுவின் மயக்கத்தாலும் தனிமனித ஒழுக்கமின்மையினாலும் மனிதத்தன்மையே அற்று போனதினாலும் வந்த வினைகள் இது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.