Kanimozhi leads minister to gave compensation | முந்தினார் கனிமொழி, பிந்தினார் அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முந்தினார் கனிமொழி, பிந்தினார் அமைச்சர்

Added : டிச 26, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முந்தினார் கனிமொழி, பிந்தினார் அமைச்சர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில், டிச., 20ம் தேதி, பள்ளி சென்ற போது, கற்பழிக்க முயன்று படுகொலை செய்யப்பட்ட, ஏழாம் வகுப்பு மாணவி புனிதாவின், 13, வீட்டிற்கு நேற்று காலை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சென்றார். புனிதாவின் தாயார் பேச்சியம்மாள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், கட்சி சார்பில், 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். தி.மு.க.,வைச் சேர்ந்த, தூத்துக்குடி எம்.பி., ஜெயதுரை, தன் சார்பில், ஒரு லட்சம் ரூபாயை, பேச்சியம்மாளிடம் வழங்கினார். ஏற்கனவே, தி.மு.க., சார்பில், 50 ஆயிரம் ரூபாயை, மாவட்ட செயலர் பெரியசாமி, அக்குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.

பிந்திச்சென்ற அமைச்சர் : கனிமொழி அங்கிருந்து சென்றதும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், ஆதரவாளர்களோடு, புனிதா வீட்டிற்கு சென்றார். அவரது தாயிடம், முதல்வர் ஜெ., அறிவித்த, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அ.தி.மு.க., தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். கொலை நடந்து ஒரு வாரத்திற்குப் பின், அமைச்சர், நேற்று தான், புனிதா வீட்டிற்கு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201203:06:37 IST Report Abuse
தமிழ்வேல் // கொலை நடந்து ஒரு வாரத்திற்குப் பின், அமைச்சர், நேற்று தான், புனிதா வீட்டிற்கு சென்றார். // என்பது தேவை இல்லாத வரி...இலவசம் போன்ற நலத்திட்டங்களை கொடுக்கும் வேலையை விட்டு விட்டு வந்தாரே அதுபோதாது ? அதுவும் பத்து விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர், அவர்கள் குடும்பங்களை கண்டுகொள்ள நேரமுமில்லை...மிக்சி கிரைண்டர் எல்லாம் திரும்பவும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.. இது இன்றைய செய்தி... அதுவெல்லாம் முடிந்ததும் சென்று பார்ப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை