புதுடில்லி: ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் முடிவை, ரயில்வே அமைச்சகம் விரைவில் எடுக்கும் என தெரிகிறது."ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, கட்டணங்கள் உயர்த்தப்படாததால், ரயில்வே துறை தள்ளாடிக் கொண்டு இருக்கிறது; ரயில்வேயை காப்பாற்ற, கட்டண உயர்வு, தவிர்க்க முடியாததாகி விட்டது' என, ரயில்வே அமைச்சக பொறுப்பு காங்கிரஸ் வசம் வந்ததில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலும், இணை அமைச்சர்களும், போகும் இடமெல்லாம் ரயில் கட்டண உயர்வு குறித்து பேசி வருகின்றனர்.ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை அவ்வப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, கட்டண உயர்வு குறித்து ஆலோசனை வழங்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் செயல்திட்டம், நடைமுறை, பொறுப்புகள் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டத்திலான குழுவுக்கு பிரதமர் உத்தரவிட்டு இருந்தார். இது குறித்த முடிவை வரும், 31ம் தேதிக்குள் அறிவிக்க ஏற்கனவே கெடு விதிக்கப்பட்டு இருந்தது.இக்குழுவின் பரிந்துரைக்கு பின், அமைச்சரவை ஒப்புதல் பெற்றதும், ஆணையம் அமைப்பதற்கான முடிவை ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.