நகரி: ரயில்வே பிளாட்பாரத்தில் தனியாக உட்கார்ந்திருந்த, ஒன்பது வயது சிறுமியின் கழுத்தை கடித்து காயப்படுத்திய வாலிபரை, பயணிகள் சிலர் போலீசில் ஒப்படைத்தனர்.ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் பாபட்லா அடுத்த ஸ்டுவர்ட்புரம் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் பேதபூடியை சேர்ந்த சிறுமியும், அவரது தந்தையும் கிறிஸ்துமசை ஒட்டி வெதுல்லபள்ளி டவுனுக்கு வந்தனர். வழியில், ஸ்டுவர்ட்புரம் ரயில் நிலையத்தில் சிறுமியை உட்கார வைத்து விட்டு சென்றார்.பிளாட்பாரத்தில் தனியாக உட்கார்ந்திருந்த சிறுமியை பார்த்த ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த ராம்பதி, 22, என்ற வாலிபர் சிறுமியை பிடித்து கொண்டு கழுத்தில் கடித்து காயப்படுத்தினான்.வாலிபரின் பிடியில் சிக்கிய சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, பயணி ஒருவர் ஓடிச்சென்று சிறுமியை காப்பாற்ற முயன்றார். அவரையும், ஜார்க்கண்ட் வாலிபர் தாக்கி காயப்படுத்தினார்.மகளின் கூச்சலை கேட்டு ஓடிவந்த சிறுமியின் தந்தை, அந்த வாலிபரின் அருகே பயத்துடன் நடுங்கியபடி இருந்த மகளை மீட்க முயற்சித்தார். அப்போது அவரது கையையும், அந்த வாலிபர் கடித்து காயப்படுத்தினார். வாலிபரின், வெறிச்செயலை பார்த்து கொண்டிருந்த சிலர், அவனை பிடித்து அருகில் உள்ள வெதுல்லபள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடித்த வாலிபரை கடுமையாக தண்டிக்க கோரி சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பெண்களும் போலீஸ் நிலையம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.