Forums fgave plea to restrict Ramdoss entry salem | ராமதாசை அனுமதிக்கக் கூடாது : தலித் அமைப்புகள் கலெக்டரிடம் மனு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமதாசை அனுமதிக்கக் கூடாது : தலித் அமைப்புகள் கலெக்டரிடம் மனு

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: "சேலத்துக்குள் ராமதாசை அனுமதிக்கக் கூடாது' என, தலித் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தர்மபுரி நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, இருபிரிவினரிடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. தலித்துகளுக்கு எதிராக, பா.ம.க, நிறுவனர், ராமதாஸ் பேசி வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில், மதுரைக்கு ராமதாஸ் சென்றபோது, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, அவருடைய வருகைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஜாதி ரீதியான பிரச்னைகள் உருவாகிவிடும் என்ற அச்சம், வட மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் எழுந்துள்ளது. சேலத்துக்கு இன்று ராமதாஸ் வருகிறார். அவர் குரங்குச்சாவடியில் உள்ள ஓட்டலில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அவருடைய வருகைக்கு, தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று மாலை, அனைத்து ஜனநாயக இயக்கங்கள் என்ற ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்புகள், "சேலத்துக்குள் ராமதாஸை அனுமதிக்கக் கூடாது' என, வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை