Advertisement
பயங்கரவாதி அபு ஜுண்டால் மீது அடுத்த மாதம் குற்றபத்திரிகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:27 IST

மும்பை: அவுரங்காபாத் ஆயுத கடத்தல் வழக்கில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, அபு ஜுண்டால் மீது, மும்பை நீதிமன்றத்தில், அடுத்த மாதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபு ஜுண்டால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு, இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டான். 2006, மே மாதம், பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகள், ஏ.கே., 47 துப்பாக்கிகளுடன், மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே காரில் சென்ற போது, போலீசில் பிடிபட இருந்தவன், பாகிஸ்தான் தப்பி சென்றான்.சவுதி அரேபியாவில் மறைந்திருந்த போது, சில மாதங்களுக்கு முன், கைது செய்யப்பட்டு, டில்லி கொண்டு வரப்பட்டான். ஏராளமான வழக்குகள் அவன் மீது உள்ளன. டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன் மீதான, ஆயுத கடத்தல் வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.சிறையிலிருந்தவாறு, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் மும்பை கோர்ட்டில், ஆஜரான அபு ஜுண்டால் மீதான வழக்கில், ஜனவரி 9ல், குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, நீதிபதி அறிவித்தார்.அதையடுத்து அவன், "அதற்கு முன், நான் வழக்கறிஞரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும்' என்றான்; அதை, நீதிபதி ஏற்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.