சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே அமைந்துள்ள எழில்மிகு கோடிமுனை கடற்கரைக்கு செல்லும் ரோடு, கரடுமுரடாக இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகனங்கள் பழுதடைந்து அவதிப்படுகின்றனர். பாரம்பரிய பகுதி மற்றும் சுற்றுலா தலமான இந்த பகுதிகளில், அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வாலிநோக்கம் கோடிமுனை கடற்கரை, காட்டுப் பள்ளி வாசல், பெரியமலை, தரை தட்டி நிற்கும் பழைய கப்பல் உட்பட, சுற்றலா பயணிகளை கவரக் கூடிய இடங்கள், அதிகம் உள்ளன. இதில், கோடிமுனையை பார்ப்பதற்கு கடற்கரையோரமாக சென்று, அங்குள்ள காட்டு பள்ளி வாசலில் தொழுகின்றனர். மணல் மேடுகளில் அமர்ந்து, அலைகளை ரசிப்பதற்கும், அருகில் உள்ள பெரியமலையை பார்ப்பதற்கும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மற்றொரு சுற்றுலாத் தலம், கப்பல் உடைக்கும் தளம். இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன் கப்பல் உடைக்கும் பணி நடந்தது. இப்போது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் புயலில் சிக்கிய தரை தட்டிய கப்பல் நிற்கிறது. இதை பார்ப்பதற்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சினிமா, "ஷூட்டிங்' அவ்வப்போது நடக்கிறது. ஆனால், இந்த இடங்களுக்கு செல்லும் ரோடு, கரடுமுரடாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதாகின்றன.
இது குறித்து, வாலிநோக்கம், முகமது அப்துல் காதர் கூறியதாவது: ராமாயண காலத்தில், வாலி வந்த இடம் இது. இரண்டு முறை அழிந்து, மூன்றாவது முறையாக உருவானது இந்த வாலிநோக்கம், என முன்னோர் சொல்வார். இங்குள்ள பெரிய மலையிலிருந்து, உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் கட்ட, கல் எடுத்து சென்றதாகவும் கூறுகின்றனர். இந்த பெரிய மலை எங்கள் ஊருக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. இங்குள்ள கோடி முனை, காட்டு பள்ளிவாசல், தரைதட்டி நிற்கும் பழைய கப்பலை ரசிக்க, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.
வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் மஜீதா அமீர்கான் கூறியதாவது: சுற்றுலா தலங்களை மேம்படுத்த, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நிதி வந்தவுடன் அதற்கான பணி நடக்கும், என்றார்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: ரோடு, விளக்குகள் அமைப்பது உட்பட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.