புதுடில்லி:"கடந்த நிதியாண்டில் நடந்த, 100க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் குறித்து, வெளிநாடுகளில் இருந்து, அறிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து, விசாரித்து வருகிறோம்' என, மத்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் பிரிவினர், மத்திய நிதித் துறையின் கீழ், செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது:கருப்பு பணத்தை பதுக்குவதற்காகவும், வரி ஏய்ப்புக்காகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடப்பதாக, ஏராளமான புகார்கள் வந்துள்ளன.வெளிநாடுகளில் உள்ள, நிதி புலனாய்வு அமைப்புகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட, சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் என, சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலையும், சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்களையும், மத்திய அமலாக்க பிரிவு, வருவாய் துறை விசாரணை இயக்குனரகம், கலால் துறை விசாரணை பிரிவு, "செபி' ஆகியவற்றுக்கு தெரிவித்துள்ளோம்.இந்த அமைப்புகள் நடத்தும் விசாரணையின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது, உண்மை என, தெரிய வந்தால், சம்பந்தபட்டவர்களின் மீது, நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.