மதுரை:வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது. இதிலும், தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் இன்னொரு வாய்ப்பும்
ஒளிந்திருக்கிறது.
ஜன., 12 - சனி, ஜன., 13 - போகி, ஜன., 14 - பொங்கல், ஜன., 15 - திருவள்ளுவர் தினம், ஜன., 16 - உழவர் தினம் ஆகிய ஐந்து நாட்கள், தொடர்ச்சியாக அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து, ஜன., 19, 20 - சனி, ஞாயிறும் விடுமுறை.ஒரு அரசு ஊழியர், இடையில் உள்ள ஜன., 17, 18 ஆகிய, இரு நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்தால், அவருக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
அது மட்டுமா? ஜன., 1 - புத்தாண்டு, ஜன., 5 - சனி, ஜன., 6 - ஞாயிறு, ஜன., 25 - மிலாடி நபி, ஜன., 26 - குடியரசு தினம், ஜன., 27 - ஞாயிறு ஆகிய நாட்களும் விடுமுறை. 31 நாட்கள் உள்ள இம்மாதத்தில், விடுமுறை மட்டுமே, 13 நாட்கள்.
இவ்வளவு நாட்கள், விடுமுறையில் கழிந்தால், அரசு அலுவலகங்களில் என்ன வேலை நடக்கும்? இந்தியாவைப் போன்ற வளர்ச்சி பெற வேண்டிய நாட்டில், இவ்வளவு விடுமுறை தேவையா? ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஒன்றும் புதிதல்ல. இது போன்று வருஷா வருஷம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு தான் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற திட்டம் மத்திய அரசு 1985 இல் கொண்டு வந்த போதே தற்காலிக விடுப்புகளை 12 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறித்தும், Restrictedd Holiday வை இரண்டிலிருந்து 6 நாட்களாக உயர்த்தவும் ஆலோசனை அனுப்பினேன். Restructed ஹோலிடிஸ் அன்று அலுவலகங்கள் மூடப்படமாட்டாது இந்தநாள் பொதுமக்களுக்கு கஷ்டம் இருக்காது என்ற யோசனையைஏற்கவில்லை இதே நிலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு பண்டிகை காலங்களில் தொடர்ந்தே வருகிறது. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்து விட்டன ஆனால் இது போன்ற யோசனையை யாரும் கேட்க தயாராக இல்லை. இந்த லட்சணத்தில், வங்கிகள் கூட மேற்கூறிய நாட்களில் இயங்காது வங்கி பணியாளர்கள், இரண்டு மூன்று தினங்களுக்கு பிறகு வேலை அதிகமாக இருக்கும் என்று கூறி (முக்கியமாக பெண் ஊழியர்கள்) sick ரிப்போர்ட் செய்கிறார்கள். இவற்றை எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்/.அவர்களின் மனைவிகள், மற்றும் உறவினர்கள் சொல்லி வைத்து செய்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்ன செய்வது இந்தியா ஒரு சுதந்திர நாடு அனைவரும் இந்நாட்டு மன்னர் வாழ்க பாரதம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.