Advertisement
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஐந்து மகளிர் போலீசார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,23:31 IST

பெங்களூரு: பெங்களூரு மாநகர காவல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும், குறைந்தபட்சம், ஐந்து பெண் போலீஸ்களை பணியில் அமர்த்த, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.தலைநகர் டில்லியில், ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும், பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்த வகையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல நடவடிக்கைகளை எடுக்க, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநில உள்துறை அமைச்சர், ஆர்.அசோகா தலைமையில், போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு காவல் நிலையத்திலும், குறைந்தபட்சம், ஐந்து பெண் போலீசாராவது பணியில் அமர்த்தப்பட வேண்டும். இதனால், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு எளிதாக இருப்பதோடு, பெண்கள் மீதான புகார்களும் விரைந்து விசாரிக்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி, இரவு நேரத்தில், தனியாக கார்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அத்தகைய கார்களை நிறுத்தி, ஓட்டுனர் பற்றிய விவரங்களை விசாரித்து, அந்த பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.மக்கள் கூடும் இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு, உடனுக்குடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இதுபோன்ற, பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201208:10:38 IST Report Abuse
Guru நல்ல முயற்சி.., வெற்றிக்கான வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.