கோல்கத்தா:ஒடிசாவிலிருந்து, மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், ஓட்டலில் சாப்பாடு கேட்டு தகராறு செய்ததில், ஓட்டல் உரிமையாளர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள், 35 பேர், கொலை வழக்கில் சிக்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் பல இடங்களை சுற்றிப் பார்க்க, ஒடிசாவிலிருந்து, 40 பேர், பஸ் ஒன்றில் வந்திருந்தனர். கோல்கத்தா அருகில் உள்ள, பெல்டா என்ற இடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், பஸ்சை நிறுத்திய சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்த சிறிய ஓட்டலில், சாப்பாடு கேட்டுள்ளனர்.சாப்பாடு கொஞ்சமாக இருந்ததால், கூடுதல் உணவை, ஓட்டல் பணியாளர்கள் தயாரித்தனர். உணவு கிடைக்க தாமதமாகிறது என்று கூறி, சுற்றுலாப் பயணிகள் ரகளை செய்துள்ளனர்.அவர்களை கண்டித்த, ஓட்டல் உரிமையாளர், அனில் கர் என்பவரை, சுற்றுலாப் பயணிகள் அடித்துக் கொன்றனர். பணியாளர்கள், நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில், மூன்று பேர் நிலைமை மோசமாக இருக்கிறது.தப்பிச் செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள் சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட, 35 பேர், கைது செய்யப்பட்டனர்.சுற்றுலா வந்த இடத்தில் கொலை வழக்கில் சிக்கியவர்கள், செய்வதறியாது திகைத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.