சென்னை:பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, 548 கோடி ரூபாயில், 3,000 புதிய பஸ்கள் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பஸ்களில், கையடக்க மின்னணு கருவி மூலம் டிக்கெட் வழங்க, 44 ஆயிரம் கருவிகள் வாங்கப்படுகின்றன.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது, 21 ஆயிரத்து 989 பஸ்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. தினசரி, 1.82 கோடி பேர், இந்த பஸ்களில் பயணிக்கின்றனர். சென்னை மாநகர பஸ்களில் மட்டும், நாள்தோறும், 47 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பயணிகளின் போக்குவரத்து வசதியை அதிகரிக்கவும், தகுதியற்ற வாகனங்களுக்கு மாற்றாகவும், 3,000 புதிய பஸ்களை, 435 கோடி ரூபாயில் வாங்க, முதல்வர் ஜெயலலிதா முன்பு உத்தரவிட்டிருந்தார். மேலும், அடிச்சட்டம், இன்ஜின் நல்ல நிலையில் உள்ள, 1,432 பஸ்களை, 98 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு, 548 கோடி ரூபாய் செலவில், 3,000 பஸ்களை வாங்க, தற்போது உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த பஸ்களை, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வாங்க, அரசு சார்பில், 150 கோடி ரூபாயை, பங்கு மூலதன உதவியாகவும், 150 கோடி ரூபாயை, கடனாகவும் வழங்கப்படும்.
அரசு பஸ்களில், வழக்கமான பயணச் சீட்டுகளுக்கு மாற்றாக, மின்னணு சீட்டு வழங்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இவை, அனைத்து பஸ்களிலும், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். எனவே, எட்டு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த பஸ்களில், அதிநவீன, கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச் சீட்டுகளை வழங்குவதற்காக, 44 ஆயிரம் கையடக்க கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்துக்கழக தலைமையகங்களில் ஏற்படுத்தப்படும். சென்னையில் அமைய உள்ள, மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருக்கும், இணையதளத்தின் மூலம், இவற்றை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.