புதுடில்லி,: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், தங்களின் மாஜி தோழரான, அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், அவரது கட்சியினர் மீதும், குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலரான, அன்னா ஹசாரேவின், ஊழலுக்கு எதிரான அமைப்பில், முக்கிய பங்காற்றியவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஹசாரே தலைமையில் நடந்த, உண்ணாவிரதப் போராட்டங்களில், தீவிரமாக பங்கேற்றார்.திடீரென, கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டதால், அன்னா ஹசாரே குழுவில் இருந்த, பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலரையும், தன்னுடன் இழுத்து, "ஏழை மக்கள் கட்சி' என்ற, பெயரில், புதிய கட்சியைத் துவக்கியுள்ளார்.இந்நிலையில், அன்னா ஹசாரேயின், ஊழலுக்கு எதிரான அமைப்பின், இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாகவும், சில விஷமிகள், அந்த இணையதளத்துக்குள் ஊடுருவி, பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும், புகார் எழுந்தது.மத்திய அரசின், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர் தான், இந்த விஷமச் செயலை செய்து வருவதாக, அன்னா ஹசாரே குழுவினர் கூறியிருந்தனர். இந்நிலையில், ஹசாரே குழுவின், மீடியா ஒருங்கிணைப்பாளர், அஜய் தீக்ஷித், நேற்று, பரபரப்பான புகாரை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த சிலர் தான், எங்களின் இணையதளத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக, எங்களின் தளத்துக்குள் ஊடுருவி, பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.டில்ல மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாகவும், எங்கள் குழுவைச் சேர்ந்த, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி, கிரண் பேடி, குழுவின், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், அந்த பொய் தகவலில் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு வரும், மின்னஞ்சல்களிலும், குளறுபடியை ஏற்படுத்தியுள்ளனர்.இவ்வாறு, அஜய் தீக்ஷித் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.