தர்மபுரி : தர்மபுரி அருகே நடந்த கலவரம் தொடர்பாக, அரசு அலுவலர்களிடம், தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர். தர்மபுரி அடுத்த, நாயக்கன்கொட்டாயில், கலப்பு திருமணம் தொடர்பாக, நவம்பர், 7ம் தேதி கலவரம் ஏற்பட்டது. இதில், நத்தம்"காலனி,' அண்ணாநகர், கொண்டம்பட்டியில் உள்ள, 300 வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய போலீசார், நேற்று முன்தினம், விசாரணை நடத்தினர். கலவரம் பகுதிக்கு தீயணைப்புதுறை வாகனங்கள் செல்ல ஏற்பட்ட காலதாமதம், தீயை அணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் மற்றும் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, தீயணைப்புத் துறை அலுவலர்களிடமும், போக்குவரத்துக்கு இடையூராக, கலவர கும்பல் வெட்டி சாய்த்த மரங்களின் எண்ணிக்கை, அவற்றை அகற்ற, நெடுஞ்சாலையினர் எடுத்துக் கொண்ட நேரம், அப்பகுதியில் பஸ்கள் செல்ல ஏற்பட்ட காலதாமம் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து அலுவலர்களிடம், விசாரணை செய்தனர்.
கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விபரம் மற்றும் கலவரத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபரங்களை, எஸ்.பி., ஆஸ்ரா கர்கிடம் இருந்து, டி.எஸ்.பி., சச்சின் நேற்று மதியம் பெற்றார். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் கலவரத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரிகளிடம், தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர், விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.