E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஐ.ஜி.,யை அடித்து து வைத்த அகாலி தளம் கட்சி பிரமுகர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2012
23:35

லூதியானா: பஞ்சாபில், சில நாட்களுக்கு முன், எஸ்.ஐ., ஒருவர், ஆளும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி பிரமுகரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், போலீஸ் ஐ.ஜி.,யை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் தாக்கி, துப்பாக்கியை பறித்த சம்பவம் நடந்துள்ளது.பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில், இம்மாதம் 5ம் தேதி, மகளை தொந்தரவு செய்த, ஆளும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி பிரமுகர், ரஞ்சித் சிங் ரானாவை, தட்டிக் கேட்ட, போலீஸ் எஸ்.ஐ., ரவிந்தர்பால் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்த சம்பவம் நடந்து, 20 நாட்கள் ஆன நிலையில், மாநில போலீஸ் உளவுப் பிரிவில், ஐ.ஜி.,யாக பணியாற்றுபவரை, அகாலி தள பிரமுகர் அடித்து துவைத்துள்ளார்.போலீஸ் அதிகாரி, எஸ்.எஸ்.மாண்ட், லூதியானாவில் உள்ள ஓட்டலுக்கு, மனைவி மற்றும் உறவினர்களுடன் சாப்பிடச் சென்றார். அந்த ஓட்டலின் உரிமையாளர், அகாலி தளம் இளைஞர் பிரிவின் முக்கிய பிரமுகரான, மணிந்தர் பால் சிங்.மணிந்தர் நடத்தி வரும் ஓட்டலுக்கு, நேற்று முன்தினம் சாப்பிடச் சென்ற, ஐ.ஜி., குடும்பத்தினருக்கும், ஓட்டல் பணியாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஐ.ஜி., குடும்பத்தினரை, மணிந்தர் சிங் மற்றும் ஓட்டல் பணியாளர்கள் தாக்கியுள்ளனர்.அவர்களை தடுக்க முயன்ற ஐ.ஜி., மாண்ட்டையும், அந்த கும்பல் தாக்கியுள்ளது. கால் முறிந்து கீழே விழுந்து கிடந்த ஐ.ஜி.,யிடம் இருந்த துப்பாக்கியையும், அந்த கும்பல் பறித்துள்ளது.ஐ.ஜி., மாண்ட் கொடுத்த புகாரை அடுத்து, கட்சி பிரமுகர் மணிந்தர் சிங் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், கட்சியிலிருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, சில மாதங்கள் ஆவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
27-டிச-201207:11:38 IST Report Abuse
Guru அடபாவிங்களா போலீசுக்கே இந்த நிலை என்றால் அதுவும் IG ... என்கெளன்டர்ல போட்டு தள்ளவேண்டியதுதான...
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.