வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது. இதிலும், தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் இன்னொரு வாய்ப்பும் ஒளிந்திருக்கிறது.
ஜன., 12 சனி, ஜன., 13 போகி, ஜன., 14 பொங்கல், ஜன., 15 திருவள்ளுவர் தினம், ஜன., 16 உழவர் தினம் ஆகிய ஐந்து நாட்கள், தொடர்ச்சியாக அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து, ஜன., 19, 20 சனி, ஞாயிறும் விடுமுறை.ஒரு அரசு ஊழியர், இடையில் உள்ள ஜன., 17, 18 ஆகிய, இரு நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்தால், அவருக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
அது மட்டுமா? ஜன., 1 புத்தாண்டு, ஜன., 5 சனி, ஜன., 6 ஞாயிறு, ஜன., 25 மிலாடி நபி, ஜன., 26 குடியரசு தினம், ஜன., 27 ஞாயிறு ஆகிய நாட்களும் விடுமுறை. 31 நாட்கள் உள்ள இம்மாதத்தில், விடுமுறை மட்டுமே, 13 நாட்கள்.இவ்வளவு நாட்கள், விடுமுறையில் கழிந்தால், அரசு அலுவலகங்களில் என்ன வேலை நடக்கும்? இந்தியாவைப் போன்ற வளர்ச்சி பெற வேண்டிய நாட்டில், இவ்வளவு விடுமுறை தேவையா? ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
நமது சிறப்பு நிருபர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதல்ல சனிக்கிழமை எதற்கு விடுமுறை ,it நிறுவனம் விடுமுறை விடுகிறது என்றால் அவன் வேலை பார்ப்பது வளர்ந்த நாடுகளுக்கு அவன் தன்னுடைய வேலையை ஐந்து நாட்கள் ஒழுங்காக செய்து விட்டு போய் விடுவான் ,ஆனால் நம் அரசு அலுவலகங்களில் முடிக்க படமால் தேங்கி கிடக்கும் கோப்புகள் எவ்வளவு இருக்கிறது அப்புறம் எதற்கு சனிக்கிழமை விடுமுறை ,ஒரு சில அரசு ஊழியர்கள் பாராட்டப்பட வேண்டும் எனக்கு தெரிந்து நிறைய பேர் சனிக்கிழமை அலுவலகம் வந்து தங்கள் வேலைகளை முடிகிறார்கள் இங்கு பேச படுவது வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை பற்றி தான்
Required such leaves in India, I don't disagree that, as well as every citizen of India Need to show their contribution in their performance. Take few examples, France employees goes on major holiday during August and December months (morethan 1 month) on account of summer holidays. China employees goes on major holiday during their Chinese New year. Major countries like US, UK, Germany goes on leave for Christmas. Even major countries goes on major holidays when it comes to their per capita income is incomparable with India. When India is going to learn.
I'M WORRIED ABOUT INDIA, FOR FURTHER DEVELOPMENT OF INDIA, GOVERNMENT MUST TAKE ACTION LIKE CHINA AND BRING MAJOR LAW INTO ENFORCE. WHICH PARTY SHALL BELL THE CAT.
அரசு ஊழியர்களில் 40% நேர்மையானவர்கள் குறை சொல்ல முடியாது... அது போல் ஆசிரியர்களிலும் 40% தரமானவர்கள்.... 60% அரசு ஊழியர்களை கண்கானித்தாலே போதும் ஒரே வருடத்தில் ஊழல் ஒழியும் அதைபோல அரசியல் வாதிகளையும் கண்கானித்தால் அவ்வளவுதான் தேர்தலின் பொது வேட்பாளர்கள் போட்டியில்லாமல் கூட தேர்ந்தெடுக்கப்படுவார்கள்...எனவே மனசாட்சியுடன் ஓவ்வொருவரும் திருந்தினால் நாடு தானாக உயரும்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.