நாகப்பட்டினம்: "சுனாமி'யின் கோரத்தாண்டவத்தில், 6,065 பேரை பறிகொடுத்த நாகை மாவட் டத்தில், நேற்று, எட்டாவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 2004ல், வங்கக் கடலோரத்தில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில், தமிழகத்தில் இறந்த, 8,018 பேரில், அதிகமாக, 6,065 பேரை பறிகொடுத்த நாகை மாவட்டத்தில், நேற்று, எட்டாம் ஆண்டு, நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நாகை அக்கரைப்பேட்டையில், 455 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்த இடத்தில் கட்டப்பட்ட தியான மண்டபத்தை, கலெக்டர் முனுசாமி திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள், 750 பேர் மவுன ஊர்வலமாக சென்று, கடற்கரையில், கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வேளாங்கண்ணியில் பாதிரியார் ஆரோக்கியதாஸ் மற்றும் மக்கள், மவுன ஊர்வலமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர். நாகை மாவட்ட கடலோர கிராமங்களான, கோடியக்கரையில் இருந்து, கொடியம்பாளையம் வரை, கனத்த இதயத்தோடு, விழிகளில் கண்ணீருடன் மீன் பிடிக்க செல்லாமல், ஆறாத வடுக்களுடன் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் மாவட்டத்தில் சுனாமி ஆழிப் பேரலையால், 473 பேர் பலியாயினர். அவர்கள் நினைவாக, கடற்கரையோரம் அரசு சார்பில் சுனாமி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று, மீன்வளத்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அங்கு நடந்தது.
காரைக்காலில் பலியான, 473 பேர், பட்டினச்சேரி மற்றும் பூவம் நண்டலாறு கரையோரமாக ஒரே இடத்தில், அப்போது புதைக்கப்பட்டனர். அந்த இடத்தில் உறவினர்கள் நினைவிடம் எழுப்பியுள்ளனர்.
நினைவு நாளையொட்டி பூக்களால் அலங்கரித்து, இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவு, பழங்கள், இனிப்புகள் மற்றும் மதுபானங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.