மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரேவுக்கு, பூங்கொத்து கொடுத்த போலீஸ்காரர், மூன்றாண்டுகளுக்கு சம்பள உயர்வை இழந்தார்.சிவசேனா தலைவர், மறைந்த, பால் தாக்கரேயின் சகோதரர் மகன், ராஜ் தாக்கரே. இவர், "மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' கட்சியை நடத்தி வருகிறார்.அசாம் கலவரத்தை, இந்திய பத்திரிகைகள் சரியாக செய்தி வெளியிடவில்லை என, தெரிவித்து, மும்பையில், முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, வன்முறை ஏற்பட்டது; போலீசார், பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டனர்.அதைக் கண்டித்து, ஆக., 11ல், மும்பை பொதுக் கூட்டத்தில், ராஜ் தாக்கரே பேசினார். அவரின் வீராவேச உரையால் ஈர்க்கப்பட்ட போலீஸ்காரர், பிரமோத் தவாடே என்பவர், சீருடையில், மேடையேறி, ராஜுக்கு பூங்கொத்து கொடுத்து, கைகுலுக்கிப் பாராட்டினார்.இதை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள், போலீஸ்காரர் பிரமோத்திற்கு, "நோட்டீஸ்' அனுப்பினர். விசாரணையில், பிரமோத் செய்தது தவறு என, முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அவருக்கு, மூன்றாண்டுகளுக்கு, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள பிரமோத், தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.