2627 acre land needed for constructed houses for poor people | குடிசை பகுதி மக்களுக்கு வீடு கட்ட 2,627 ஏக்கர் நிலம் தேவை : முதல் கட்ட கணக்கெடுப்பில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிசை பகுதி மக்களுக்கு வீடு கட்ட 2,627 ஏக்கர் நிலம் தேவை : முதல் கட்ட கணக்கெடுப்பில் தகவல்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தமிழகத்தில் குடிசை பகுதி மக்களுக்கு, மத்திய அரசு நிதி உதவியுடன், வீடு கட்டும் திட்டத்துக்கு, 2,627 ஏக்கர் நிலம் தேவை என, குடிசை மாற்று வாரியம் மதிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு, தரமான இருப்பிட வசதியை உறுதி செய்வதற்காக, "குடிசைகள் இல்லாத நகரங்கள்' என்ற நோக்கத்துடன், "ராஜிவ் வீட்டு வசதி திட்டம்' உருவாக்கப்பட்டது.

ஒரு லட்சம் வீடுகள் : இத்திட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள், 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இதற்கான செலவில், 50 சதவீதத்தை, மத்திய அரசும்; 40 சதவீதத்தை, தமிழக அரசும்; 10 சதவீதத்தை, பயனாளிகளும் ஏற்க வேண்டும். குடிசை பகுதி மக்களுக்கு, வீடுகள் கட்டுவதற்காக, காலி நிலங்களை கண்டறிந்து, அது குறித்த விரிவான அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில், இதற்கான முதல் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் தெரிய வந்த
விவரங்கள் குறித்து, அண்மையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை, இறுதி செய்வது குறித்து முடிவு செய்ய, குடிசை மாற்று வாரிய தலைவரும், வீட்டுவசதித் துறை செயலருமான பணீந்திரரெட்டி தலைமையில், உயரதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து, குடிசை மாற்று வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 10 நகரங்களில், ராஜிவ் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த உள்ளது. இதற்காக நடந்த முதல்கட்ட கணக்கெடுப்பில், தெரியவந்த விவரங்களின்படி, இந்நகரங்களில், 34 லட்சம் பேர், ஆட்சேபகரமான குடிசை பகுதிகளில் வாழ்ந்து வருவகின்றனர்.

2,627 ஏக்கர் நிலம் : இவர்களுக்கான குடியிருப்புத் தேவையை பூர்த்தி செய்ய, 2,627 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
ஆனால், தற்போதைய நிலையில், கணக்கெடுப்பு நடந்த, 10 மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம், 469 ஏக்கர் நிலம் மட்டுமே கிடைத்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும், 17 லட்சம் பேர் குடிசை பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட, 1,333 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. வரும், 2017ம் ஆண்டுக்குள், இந்த மக்கள் தொகை எவ்வளவு அதிகரிக்கும்; அதன் அடிப்படையில் இவர்களுக்கான குடியிருப்பு தேவை எப்படி இருக்கும்; இதற்கு தேவையான நிலங்களை எப்படி பெறுவது என்பது குறித்து, அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை