புதுடில்லி: " கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் தருகின்றன என்ற விவரத்தை, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய கம்பெனி விவகார துறை அமைச்சர், சச்சின் பைலட் கூறியதாவது:நாட்டில் உள்ள, அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களின் சம்பளம் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனங்களின், தலைமை நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு, கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு என்பதை, தெரிவிக்க வேண்டும்.அதே போல், மற்ற ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற விவரத்தையும், தெரிவிக்க வேண்டும். மற்ற பொது ஊழியர்களுக்கு, போதிய அளவில் சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை எனக் கூறப்படுவதால், இந்த விவரத்தை கேட்டுள்ளேன்.இந்தாண்டு இறுதிக்குள், தலைமை செயல் அதிகாரிகள் சம்பளம் பற்றிய விவரத்தை, சம்பந்தபட்ட நிறுவனங்கள், மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இதை அடிப்படையாக வைத்து, சம்பளம் பற்றிய விதிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது.இவ்வாறு, சச்சின் பைலட் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தனியார் நிறுவனத்தில் ஊதியம் என்பது, திறமை, உழைப்பு, லாபத்தில் அவரின் பங்கு, அந்நிறுவனத்துடனான ஊழிய கால அளவு, நிறுவனத்திற்கு அவருடைய தேவை என்று பல நுணுக்கமான விடயங்களை உள்ளடக்கியது. செயல் அதிகாரிகளுக்கு அதிக சம்பளமும், அடிப்படை ஊழியர்களுக்கு குறைவான ஊதியமுமே இருக்கும். தனியார் நிறுவன செயல் அதிகாரிகளின் ஊதியத்தை, அரசு நிறுவன செயல் அதிகாரிகளின் ஊதியத்துடன் ஒப்பீடு செய்யும் இவரால், தனியார் நிறுவன அடிப்படை ஊழியருக்கு, அரசு அடிப்படை ஊழியரின் ஊதியத்திற்கு ஈடான ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா?? இப்படி அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொண்டே சென்றால், பொருளாதார சமநிலை ஒருபோதும் ஏற்படாது.. வல்லரசு என்று வாயால் மட்டுமே சொல்லி கொண்டு இன்னும் சில தலைமுறைகளை ஓட்டலாம்... இந்தியாவில் இருக்கும் எல்லா ஊழியர்களுக்கும், அது பொதுத்துறை ஆகட்டும், தனியார் துறை ஆகட்டும், எப்பொழுது குறைந்த பட்ச ஊதியமும், அதிகபட்ச ஊதியமும் நிர்ணயம் செய்ய படுகிறதோ, எப்பொழுது அதன் வித்தியாசம் குறைவாக இருக்கிறதோ அப்பொழுதுதான் பொருளாதார சமநிலை ஏற்பட்டு, குற்றங்கள் குறைந்து, வல்லரசாக மாற முடியும்.. ஐரோப்பாவில், அனைவரும் கார் வைத்துள்ளனர்.. அனைவரும் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளனர் என்று வருடா வருடம் சுற்றுபயணம் செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், இங்கு பின்பற்றப்படும் மற்ற விடயங்களையும் அறிக்கையிலே சேர்க்க வேண்டும்.. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிற மனிதர்களின் பூமி ஒருபோதும், சொர்க்கமாக மாறாது..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.