வீட்டுவசதி வாரியத்தில் செயற்பொறியாளர் முதல், நிர்வாக இயக்குனர் வரையிலான அதிகாரிகளின், நிதி, நிர்வாக அதிகார வரம்புகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மூன்று உறுப்பினர் கொண்ட உயர் நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது. வீட்டுவசதி வாரியத்தில் புதிய திட்டங்கள் உருவாக்குவது, செயல்படுத்துவது, குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரம் வரையறுக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பழைய வரம்புகள் : இதில், வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு, அனைத்து பிரிவு அலுவலர்களையும் கண்காணித்தல், பிரிவுகள் தொடர்பான நிர்வாக முடிவுகளை எடுத்தல், ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல், வருவாய் மற்றும் கணக்குகள், தொழில்நுட்ப பிரிவுகளை நிர்வகித்தல் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், அந்தந்த பிரிவுகளின் செயற்பொறியாளர்களுக்கும், கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர்களுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரங்கள், நிதி சார்ந்த வரம்புகளை கொண்டவையாக உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில், நிதிவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அதிகரித்துள்ள விலைவாசி நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வரம்புகள் நடைமுறைக்கு ஒத்துவராதவையாக உள்ளன.
இதனால், குறைந்த எண்ணிக்கையிலான வீடு, மனைகள் கொண்ட திட்டங்கள் விஷயத்தில், கோட்ட அளவில் முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப பிரிவு, வாரிய தலைமையகம் ஆகியவற்றில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் நிதி, நிர்வாக அதிகார வரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலை குழு : இது தொடர்பாக, அண்மையில் நடந்த, வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள அதிகார வரம்புகளை, எந்த அளவுக்கு மாற்றியமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கையளிக்க, வாரிய நிர்வாக இயக்குனர், குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர், நிதித்துறை இணை செயலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில், அதிகார வரம்புகளை மாற்றி அமைப்பது குறித்து, இறுதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.