குருவாயூர்: ஆண்டுக்கொருமுறை மட்டுமே நடக்கும், குருவாயூர் கிருஷ்ணனுக்கான சந்தன அபிஷேக நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுக்கொருமுறை, மூலவருக்கு சந்தன அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பிற தினங்களில், சந்தனக் காப்பு மட்டுமே நடைபெறும். சந்தன அபிஷேக நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக, கோழிக்கோடு சாமூதிரி மன்னர் குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக நடத்தி வருகின்றனர்.இதற்கான சந்தனக் கலவையில், காஷ்மீரில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட குங்குமப்பூ, மைசூர் சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர், கஸ்தூரி ஆகியவை சேர்க்கப்படும். இவ்வாறு தயாரித்த சந்தனக் கலவை தங்கக் குடத்தில் நிரப்பி, சன்னதிக்கு முன்மண்டபத்தில் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.பின், உச்சிக்கால பூஜைக்கு முன், மூலவருக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.