ஆமதாபாத்: குஜராத் முதல்வராக, நான்காவது முறையாக, நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்; அவருடன், 16 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.இம்மாதம், 13 மற்றும் 17ம் தேதிகளில், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 182 இடங்களில், 115 இடங்களை, ஆளும் பாரதிய ஜனதாவும், 61 இடங்களில் காங்கிரசும், இரண்டு இடங்களில்,பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர், கேசுபாய் படேலின் பரிவர்த்தன் கட்சியும், நான்கு இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.தலைநகர் ஆமதாபாத்தில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில், பதவியேற்பு விழா நேற்று நடந்தது. முதல்வராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன், ஏழு கேபினட் அமைச்சர்களும், ஒன்பது இணையமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மாநில கவர்னர், கமலா பெனிவால் பதவிப்பிரமாணம் செய்தார்.குஜராத் முதல்வராக தொடர்ந்து, மூன்றாவது முறையாகவும், மொத்தம் நான்காவது முறையாகவும், மோடி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பா.ஜ., மூத்த தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர். மோடியின் தாய், ஹீரா பென்னும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.ஸ்டேடியம் முழுவதும் அமர்ந்திருந்த, பா.ஜ., தொண்டர்கள், "பாரத் மாதா கீ ஜே' என, கோஷமிட்டனர். விழாவில், ஜெயலலிதா பங்கேற்றதால், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படும் என, பலரும் பேசினர்.பீகார் முதல்வர், நிதிஷ்குமார், பாரதிய ஜனதாவை சேர்ந்த,பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி போன்றோர்விழாவில் பங்கேற்கவில்லை.***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.