Deterrent laws needed to deal with rape cases:Jayalalithaa | பாலியல் குற்ற தண்டனையை கடுமையாக்க வேண்டும்: ஜெ., | Dinamalar
Advertisement
பாலியல் குற்ற தண்டனையை கடுமையாக்க வேண்டும்: ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறியதாவது:டில்லியில், கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழகத்தில், தூத்துக்குடி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து, தீவிர விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

பாலியல் குற்ற வழக்குகளை விசாரிப்பதில், காலதாமதம் ஏற்படாமல், விரைவில் விசாரணையை முடித்து, தீர்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
27-டிச-201205:37:19 IST Report Abuse
s.maria alphonse pandian நேற்று கனிமொழி தூத்துக்குடி போராட்டத்தில் பேசியதை உடனே செயல்படுத்தி கைது செய்யப்பட சுப்பையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள ஜெயாவுக்கு பாராட்டுக்கள்...இது போல, எதிர்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கும் பக்குவம் எல்லா விஷயத்திலும் வேண்டும்...
Rate this:
35 members
0 members
34 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
27-டிச-201205:14:38 IST Report Abuse
Samy Chinnathambi குடும்ப பெண்களை கணவர்களிடம் இருந்து பிரிப்பவர்களுக்கு ஏதாவது தண்டனை உண்டா மேடம்???
Rate this:
8 members
1 members
68 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
27-டிச-201204:32:55 IST Report Abuse
N.Purushothaman பல குற்றங்கள் நடப்பதற்கு நம்முடைய ஓட்டையான சட்டமும் ஒரு மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது....சட்டத்தில் நிறைய மாறுதல்கள் தேவை....தப்பு செய்கிறவன் அதை செய்தால் அதிக பட்சமாக என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தே செய்கிறான்....ஆக தண்டனை கடுமையாக்கபட்டால் தான் இதற்க்கு தீர்வு ஏற்படும்....
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-டிச-201210:39:41 IST Report Abuse
villupuram jeevithanமரண தண்டனை கொடுத்தால் , பிரதிபா போன்ற ஜனாதிபதி இருந்தால் என்ன செய்வது?...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
PARANEE - SINGAPORE,சிங்கப்பூர்
27-டிச-201204:23:39 IST Report Abuse
PARANEE அம்மா ஏற்கனவே பஐகாட் மற்றும் போர்ட் கம்பனிகளை மோடிக்கு தாரை வார்த்து விட்டு தற்போது மகிந்தர செய்யார் 4000 கோடி ப்ரோஜெக்டயும் நழுவவிட போகிறார் என்று தெரிகிறது. தினமலர் இதற்கு ஒரு செய்தி வெளியிட்டால் நல்லது. ஏற்கனவே 1 லட்சம் வேலைவாய்ப்பு இழந்துள்ளோம் தற்போது 30000 பேருக்கு கிடைக்கும் வேலையை இழக்க உள்ளோம்.
Rate this:
9 members
0 members
31 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
27-டிச-201203:54:41 IST Report Abuse
Skv கேஸ் முடிஞ்சு தீர்ப்பு வரத்துக்கு முன்னால இந்த நாயிங்க என்னவெல்லாம் அக்குரமும் செய்வானுகளோ எவர் கண்டது. சின்ன குழந்தைகளை நாசம் செய்து கொலையும் செய்யும் கொடியவர்களை அந்த ஸ்பாட் ல சுட்டு கொல்லணும்
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
27-டிச-201202:24:20 IST Report Abuse
Panchu Mani சென்ற ஆட்சியில் துணை முதல்வரின் திருப்பூர் விழா பாதுகாப்பிற்கு சென்று வந்த பெண் போலீஸ் கற்பழிக்கப்பட்டு இறந்து போனது, கிண்டி நட்சத்திர ஓட்டலில் இளம் பெண் தஞ்சம் அடைந்து வெளியில் பட்ட பகலில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஆட்டம் போட்டதும் மாதிரியான சம்பவங்கள் இனி எதிர் காலத்தில் நிகழா வண்ணம் சட்டங்கள் கடுமை ஆக்கப்பட வேண்டும்.
Rate this:
7 members
0 members
24 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
27-டிச-201201:27:12 IST Report Abuse
Sekar Sekaran பாலியல் குற்றங்கள் என்பது..கற்பழிப்பது..உடல் ரீதியாக கொடுமை செய்வதோடு இல்லாமல்..பேச்சுக்களால்..இரட்டை அர்த்தம் தரும் மொழித்திறன் மூலம் வார்த்தை ஜாலங்களால் "வதைக்கும்" போக்கினையும் "சேர்த்தே" நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் உண்மையான நடவடிக்கையாக இருக்கும். புரிந்திருக்கும்..நான் சொல்லவந்தது..சிலருக்கு இதுவே பிழைப்பாய் ஆயிற்று..அதுபோன்ற நாலாந்தர அரசியல்வாதிகளை "ஒடுக்க' இதுவே நல்லதோர் தருணம்..போராட்டம் நடத்தி விளம்பரம் நடத்தும் ஓர் குடும்ப நிறுவனத்தின் தலைவரின் "போக்கிலே" மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும்..சரிதானே?
Rate this:
92 members
1 members
32 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-டிச-201204:48:41 IST Report Abuse
மதுரை விருமாண்டிஆமாம், ஆமாம்... "பாலியல் குற்ற தண்டனையை கடுமையாக்க வேண்டும்", அப்புறம் ?? அதை தூக்கி கடாசிட்டு நாலு காசு பாக்கணும்.. எத்தனை கேஸு, எத்தனை கேஸு ? பெண்கள் கதறவும், குற்றவாளிகள் கும்மாளம் போடவும் பெண்களுக்கு மம்மியே காசு கொடுத்து கேசை அமுக்கி வைத்திருக்கிறார்கள் .. வாயாலே பந்தல் போடறதுக்கு மம்மியை மிஞ்ச முடியுமா ??...
Rate this:
18 members
0 members
41 members
Share this comment
Jai - ,கனடா
27-டிச-201205:49:06 IST Report Abuse
Jaiசரிதான்....
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
27-டிச-201200:49:20 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் நாடும் நாட்டு மக்களும் மிகவும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள் என்பது டெல்லியில் மற்றும் அணைத்து மாநிலங்களிலும் நடக்கும் குற்ற சம்பவங்கள் மூலமாக தெளிவாக உணரமுடிகிறது.../// இந்தியாவில் ஆளும் பிரதமரும் சரி இல்லை…/// நாட்டில் சட்டம் சரி இல்லை.../// நாட்டில் கட்டமைப்பு சரி இல்லை.../// நாட்டில் பொருளாதாரம் சரி இல்லை.../// நாட்டில் அரசியல் சரி இல்லை.../// நாட்டில் போலீஸ் சரி இல்லை.../// நாட்டில் மாணவர்கள் சரி இல்லை.../// நாட்டில் மாணவிகள் சரி இல்லை.../// நாட்டில் சாமியார்கள் சரி இல்லை.../// நாட்டில் ஆசிரியர்கள் சரி இல்லை.../// நாட்டில் வியாபாரிகள் சரி இல்லை.../// சரியாக நாட்டுக்கு தன் பங்களிப்பை அளித்து கொண்டு இருப்பவன் விவசாயி மட்டுமே.../// அதனால் தான் அனைவராலும் விவசாயி ஏமாற்றபடுகிறான்...///டப்பா சட்ட திட்டங்களை வைத்து கொண்டு நாட்டை படு பாதாளத்தில் தள்ளி உள்ளது காங்கிரஸ்../// கடந்த 60 வருடங்களாக இவர்கள் செய்த சாதனைதான் என்ன???? நாட்டில் ஏழை, எளிய, பாமர, விவசாய, கூலி வேலை செய்யும் மக்கள் தினம் தினம் படும் துயரம் நாட்டில் சொல்லமுடியாத அளவுக்கு பெருகி விட்டது.../// '''' ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்''' என்ற போதும்.../// யாரும் இறைவனை காணவே தயாராக இல்லாத பொது../// ஏழையின் சிரிப்பு காணல் நீர் மட்டுமே .../// கள்ள நோட்டு அடிப்பவன் கூட ""காந்தியை"" சிரிக்க வைக்கிறான்...//// நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக ராணுவ ஆயுதங்கல் கொள்முதல் செய்வது முதல் ஒரு மனிதனின் உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை ஊழல்.../// அந்த அளவுக்கு நாட்டில் குற்றங்கள் பெருகி விட்டது அரசு சார்ந்த எந்த துறையாக இருந்தாலும் ""காரி துப்பி"" ...மலம் கழிக்கும்...அளவுக்கு லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.../// இதில் அதிகபடியாக பாதிக்கபடுவது ஏழை, எளிய, பாமர, விவசாய, கூலி வேலை செய்யும் மக்கள் ஏனென்றால் இவர்களுக்கு படிப்பறிவு இல்லை../// போதுமானதாக பணமும் இல்லை../// மக்கள் சேவை செய்யும் அரசு அதிகாரி முதல் காவல்துறை அதிகாரி வரை ஏழை, எளிய, பாமர, விவசாய, கூலி வேலை செய்யும் மக்கள் கேலி கூத்தாகி விட்டார்கள்.../// மத்தியில் கடந்த 60 வருடங்களாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கடந்த 15 வருங்களாக கடுமையாக நாட்டின் வளர்ச்சியை முடக்கி போட்டுள்ளது.../// கடந்த B.J .B ஆட்சி காலத்தில் தங்க நாற்கர சாலை, அணுகுண்டு சோதனை என நாட்டின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு முக்கியதுவம் கொடுத்து பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தபட்டன.../// நாட்டின் வளர்ச்சி விகிதமும் சீராக இருந்தது ...//// அந்த சமயத்தில் ஒரு அமரிக்க டாலர்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 42 முதல் 44 வரை என்ற நிலையில் இருந்தது.../// தற்போது 55 முதல் 57.5 என்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.../// அணைத்து நாடுகளையும் முன்னே தள்ளி விட்டு.../// நாம் புறமுதுகு இட்டு இரண்டாம் புலிகேசி போல பின்னோக்கி ஓடி கொண்டு இருக்கிறோம்.../// காங்கிரஸ் அரசானது நாம் வல்லராசாகி கொண்டு இருக்கிறோம் என்று புளுகி கொண்டு இருக்கிறது../// சரி கெட்டிகாரனுடைய புளுகு எட்டு நாளைக்கு.../// நாம் காங்கிரஸ் ஆட்சியின் ஒரு காலமும் வல்லரசு ஆகா வாய்ப்பே இல்லை.../// காங்கிரசும் காந்தி பேரை சொல்லி சொல்லி இதுவரை நாட்களை கடத்தி விட்டது.../// இன்று இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மற்றும் குஜராத் விளங்குகிறது.../// காரணம் இங்கு கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் காங்கிரஸ் அடித்து செல்லப்பட்டது.../// தொழில்துறை மற்றும் கல்வி , பொருளாதரத்தில் தமிழகம் மற்றும் குஜராத் முன்னோடியாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் மருத்துவத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம்…/// மும்பையை பின்னோக்கி தள்ளி இருக்கிறோம்../// மும்பை தற்போது காங்கிரசின் கடிவாள பிடியில் சிக்கி சின்னா பின்னமாக சிரழிந்து கொண்டு இருக்கிறது ///இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி மாநிலங்களுக்கு என வரையறுக்க பட்ட சட்ட திட்டங்களுக்குள் உட்பட்டு தான் மாநில அரசு செயல் படமுடியும்..///மக்களால் தேர்த்து எடுக்க பட்ட ஒரு மாநில அரசின் கடிவாளம் கூட மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கையில்தான்.../// மாண்புமிகு அம்மா அவர்கள் நிலஅபகரிப்புக்கு என தனி நீதிமன்றம் அமைக்க ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்தார்கள்.../// இதன் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கபடும்.../// இதுவும் செயல்படாமல் தடுக்கப்பட்டு வழக்கு வரை சென்றது.../// தற்போதைய இந்திய நீதித்துறை முடமாக்கபடுவதற்க்கு காரணம் காங்கிரஸ் அரசு தான்...//// போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் இல்லை../// இருக்கும் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் இல்லை../// இருக்கும் நீதிபதிகள் நீதிமான்களாக இல்லை.../// நீதிமான்களாக இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை../// பணக்கார குற்றவாளிகளின் தாரகமந்திரம் முன் ஜாமீன்.../// பரம்பரை குற்றவாளிகளின் தாரகமந்திரம் ஜாமீன்…////இதனால் தான் மாண்புமிகு அம்மா அவர்கள் ஒரு குற்றம் செய்தாலும் குண்டர் சட்டம் பாயும் என ஒரு அறிவிப்பை விட்டு இருக்கிறார்கள்.../// இன்று இந்தியாவிலே சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து நீதி நிலைநாட்ட பட்டு வரும் மாநிலத்தில் தமிழ்நாடு முதன்மை இடத்தில் உள்ளது.../// இந்தியாவில் உள்ள பழமையான சட்டத்தை களைந்து விட்டு...//// குற்றவாளிகள் எளிதில் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பி செல்லாதவாரு தண்டனையை கடுமையாக்கினால் தான் இந்தியாவில் குற்றங்கள் குறையும்../// ஒரு நல்ல அரசினுடைய முக்கிய கடமை என்பது குற்றம் நடக்காமல் தடுப்பது தான்.../// டெல்லி, தூத்துக்குடி சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவம்.../// இதை தடுக்க தவறிய காங்கிரசும் ஒரு குற்றவாளியே../// நாட்டின் சட்ட திட்டங்களை கடுமையாக்காமல் குற்றங்களை குறைக்க முடியாது../// இது மத்திய அரசின் கையின் உள்ளது../// அவர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.../// தனக்கு தானே ஏன் குழி தோண்டவேண்டும் என்ற எண்ணம்.../// இதனால் பாதிக்கபடுவது மாநில அரசை ஆளுபவர்களும், மக்களும் தான்...//// தனியாக சுயமாக முடிவு எடுக்க முடியாத இந்திய தலைமையால் நாம் உலக நாடுகளின் முன்னால் அசிங்க பட்டு அவமான பட்டு நிற்கிறோம்.../// இந்தியாவில் தனியாக, சுயமாக யாருக்கும் பயப்படாமல் ஒரு சிறந்த முடிவை எடுக்க முடியும் என்றால் அது மாண்புமிகு அம்மா அவர்களை தவிர வேறு யாராலும் முடியாது.../// மாண்புமிகு அம்மா அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வந்தால் மட்டுமே நாடு உருப்படும்.../// நாட்டில் உள்ள சட்ட திட்டங்களும் புதுமையாக உருவாகும்../// நாடும் வளர்ச்சி பாதையில் செல்லும்...///
Rate this:
66 members
1 members
77 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
27-டிச-201200:41:32 IST Report Abuse
Thangairaja இதற்காக ......இதை சொல்வதற்காக திமுக போராட்டம் நடத்தி.... கனிமொழியால் ரெண்டு லட்சமும் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டுமா...? இதையாவது சொன்னது மாதிரி செய்தால் நன்றாக இருக்கும். அதேநேரம், அப்பாவி ஆண்கள் பாதிக்கப் படாமலிருக்க வழிவகை செய்ய வேண்டும்.
Rate this:
19 members
1 members
25 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-201200:34:14 IST Report Abuse
தமிழ்வேல் செய்தி, அவர் வேலை முடிந்தது என்பது போல் உள்ளது...
Rate this:
8 members
1 members
11 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்