சென்னை: கல்வியறிவற்ற மகளிருக்கு கற்றுக்கொடுத்து, படிப்பறிவு உள்ளவர்களாக உருவாக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுதோறும், 50 ஆயிரம் ரூபாய் வீதம், 30 குழுக்களுக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
படித்த தெரியாதவர்கள், கையெழுத்து போட தெரியாத குழுக்களில் உள்ள மகளிருக்கு, உறுப்பினர்கள் கல்வி கற்று கொடுத்து, கல்வியறிவு பெற்ற குழுக்களாக உருவாக்குகின்றனர். இவர்களுக்கு, வயது வந்தோர் கல்வி அலுவலர் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, "எழுத்தறிவு பெற்றவர்கள்' என, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வியறிவு பெற்ற ஊராட்சி அளவிலான குழுக்களுக்கு, விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இதற்காக, கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், வயது வந்தோர் கல்வி அலுவலர்கள், முறைசாரா கல்வி திட்ட அலுவலர்கள், புது வாழ்வு திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அடங்கிய, மாவட்ட அளவிலான தேர்வு குழுவையும் அரசு அமைத்துள்ளது.
இக்குழு, மாவட்டத்தில், 100 சதவீத கல்வியறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை, விருதுக்கு பரிந்துரை செய்யும். இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களின் இறுதி பட்டியல் அடிப்படையில், மாநில தேர்வு குழு, 30 குழுக்களை தேர்ந்தெடுக்கும். தற்போது இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்தாண்டில் விருதுகள் வழங்கப்படும்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.