ஐதராபாத்: திருமலையில், வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில், சொர்க்கவாசல் தரிசனம் கிடைக்காமல், குழந்தைகள் முதல் முதியோர் வரை, 60 ஆயிரம் பேர் அவதிக்கு உள்ளாயினர். திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,க்களுக்கு, அதிக பாஸ்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென, தெலுங்கு தேசம் கட்சி கோரியுள்ளது.வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை கொடுத்தது. மூன்று நாட்கள் வழங்கிய தரிசன டிக்கெட் வினியோகத்தில், பல குளறுபடிகள் நடந்துள்ளது. இதன் மீது, நீதி விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, "மாஜி' அமைச்சர்களான நகரி எம்.எல்.ஏ., முத்துகிருஷ்ணம நாயுடுவும், காளஹஸ்தி எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணா ரெட்டியும் மாநில அரசுக்கு, கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும், ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்தை முன்னிட்டு, திருமலை தேவஸ்தான போர்டின் சேர்மன், நிர்வாக அதிகாரி மற்றும் அதிகாரிகள், ஆயிரக்கணக்கில் பாஸ்களை வழங்கினர். இதனால், ஏழை, நடுத்தர பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.சாமி தரிசனம் செய்வதற்கு, திருமலையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பலரும் சாமி தரிசனம் செய்யாமலே ஊருக்கு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.வசதி குறைவான ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்கள் திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை, இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.