Government job for farmer's family: Karunanidhi | தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: கருணாநிதி

Added : டிச 26, 2012 | கருத்துகள் (60)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: கருணாநிதி,Government job for farmer's family: Karunanidhi

சென்னை:"வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட, டெல்டா மாவட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு, நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:காவிரி பிரச்னையில், தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. அரசியல் கட்சிகளையோ, விவசாய அமைப்புகளையோ கலந்து ஆலோசிக்காமல், பிரச்னையை அணுகுவது, உரிய தீர்வை ஏற்படுத்தாது.தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து போவதைக் கண்டு, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த, 10 விவசாயிகள், இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை, குறைத்துக் காட்டுவதில் தான், அரசு கவனமாக உள்ளது.

விவசாயிகளை சாக விடாமல் காப்பாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி காண வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, தாராளமாக இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். வேலையிழந்து தவிக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், நிவாரணம் அளிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையை மறைக்காமல், அவர்களின் குடும்பங்களுக்கு, தாமதமின்றி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப் பணி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prasad - Madurai  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-201209:47:15 IST Report Abuse
Prasad ஊரான் வாய கிண்டுரது இந்த பெருசோட வேலை அதுக்கு சப்பைகட்டு கட்டு கட்டுரது மரியா வேலை
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
27-டிச-201209:05:55 IST Report Abuse
மதுர முனியாண்டி கலைஞர் TV யில் வேலை போட்டு குடுக்கலாமே... நிறைய சம்பளம் கிடைக்கும்..
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
27-டிச-201209:04:54 IST Report Abuse
மதுர முனியாண்டி நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான்....கலைஞர் TV க்காக கொள்ளை அடித்த மக்கள்(எங்கள்) பணமான 250 கோடியை அந்த விவசாயிகள் குடும்பத்திற்கு பிரித்து குடுத்தாலே அவர்களுக்கு அரசு வேலை collector வேலை எதுவுமே தேவை இல்லை...10 தலைமுறைக்கு அவர்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்...செய்வீர்களா????????
Rate this:
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
27-டிச-201209:03:26 IST Report Abuse
Karthi உங்கள் பணத்திலிருந்து விவசாயிகளுக்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கொடுக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
பாரதி - coimbatore,இந்தியா
27-டிச-201207:55:20 IST Report Abuse
பாரதி முதல்ல மதுரயில் செத்தவங்க குடுபதுக்கு வேல குடுக்க சொல்லு
Rate this:
Share this comment
Cancel
alriyath - Hongkong,சீனா
27-டிச-201207:50:51 IST Report Abuse
alriyath அறிக்கை மலையா கொட்டுவத பார்த்தால், எதோ தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதை உறுதி செய்கிறது போல் தெரிகிறது.. இவர் வீட்டு பிரசசினைய எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிருக்காங்க போல.. ஒரு கத உண்டு, சாபாட்டிற்காக இரு நாய்கள் சண்ட போடுகையில் ஒரு பூனை அதனை சாப்பிட்டு விட்டதாம். அது போல் உள்ளது தாத்தாவும் பாட்டியும் செய்வது. தண்ணிக்கும், மின்சாரத்திற்கும் இவர்களுக்குள் சண்டை போட்டுகொண்டு, மத்திய அரசை மக்களிடம் இருந்து காபாற்றி வருகிரார்கள்.. உங்கள் கூற்றுப்படி, பாட்டிதான் அனைத்து கட்சியையும் கூட்ட மாட்டேங்குரங்கன்ன, நீங்க பண்ணலாமே?
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
27-டிச-201207:42:01 IST Report Abuse
Giri Srinivasan எதிர்கட்சிகள் இடித்துரைக்கத்தான் அதிலும், கலைஞர் இருப்பதால் தான் இந்த வேலையும் நடக்கிறது. இல்லையெனில், இவர்கள் எல்லா விசயங்களிலும் கும்பகர்ணங்கள் ??? MGR ஆட்சியில் கலைஞரால் தான் ஓரளவு வேலைகள் நடந்தன என்பதை நாடறியும். ஆனால் இன்று, எதிலும் அடக்குமுறை. நியாயம் சொல்ல முடியுமா ???? கலைஞர் ஆட்சியில் மட்டும் ஏன் க்ளைமாக்சில் தான் J வருவார். நியாயம் சொல்லும் காவல்துறை போல ????அதுவரை அவருக்கு வேலையே கிடையாததைப்போல...??? இப்போதும் யாரை சுட்டாலும், கொலை நடந்தாலும், தற்கொலை, எந்த பேச்சும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது .ஒரு வேளை அவங்க படம் போட்டுக்கிட்டு நாக்க, மூக்க வெட்டிக்கனுமோ ???? சேகரா நல்லா மனசுல வச்சிக்கோப்பா ???? அப்பிடி எதுவும் செஞ்சிக்காதப்பா ????
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
27-டிச-201207:24:00 IST Report Abuse
T.R.Radhakrishnan இவரது ஆட்சியில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப் பட்டனரே.....அவர்கள் குடும்பத்தில் யாருக்காவது அரசு வேலை வழங்கினாரா? விவசாயிகளுக்கு உரியதை காலத்தோடு செய்ய வேண்டும்...அதில் மாற்றுக் கருத்து இல்லை......ஆனால், அரசு வேலை என்று சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசுவது பொறுப்பற்ற செயல்........
Rate this:
Share this comment
Cancel
criminal in politics - delhi,இந்தியா
27-டிச-201207:02:38 IST Report Abuse
criminal in politics மக்கள் தன்னை எங்கு மறந்து விடுவார்களோ என்று எண்ணி, தினம் தோறும் தன் புகை படம் பத்திரிக்கைகளில் வரவேண்டும் என்று திரு கலைஞர் ஏதேதோ செய்து கொண்டு இருக்கிறார் .................அதற்காக விவசாயிகளின் வாழ்வில் விளையாடுவதா????????????? ஏற்கனவே அவர்கள் துவண்டு போய் இருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
criminal in politics - delhi,இந்தியா
27-டிச-201206:55:02 IST Report Abuse
criminal in politics இரண்டு பக்கமும் கூர் தீட்ட பட்ட ஒரு ஆயுதத்தை திரு வால்மார்ட் கலைஞர் எடுத்து இருக்கிறார் .....ஒரு புறம் அரசு வேலைகளில் இடம் கிடைக்க கூடும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் தவறான முடிவை எடுக்க வேண்டும் என்று ................... மறுமுனை யில் கலைஞர் அவர்களின் வாக்கு வங்கி ............
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27-டிச-201219:07:51 IST Report Abuse
சு கனகராஜ் பொல்லாத வாக்கு வங்கி? எல்லோரும் இப்போ அவருக்கு ஒட்டு போட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் பூனை கண்ணை மூடினால் பூலோகமே இருண்டு போய்விடுமாம் தற்கொலையை ஊக்குவிக்கிறார் தமிழ் தாத்தா வால்மார்ட் கருணாநிதி ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27-டிச-201219:14:30 IST Report Abuse
சு கனகராஜ் நல்ல கேளப்புராருய்ய பீதிய ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை