புதுடில்லி: ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த, "இஜட்' பிரிவு பாதுகாப்பை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய ராணுவ தளபதியாக இருந்த, வி.கே.சிங்., மே மாதம், ஓய்வு பெற்றார். இவருக்கு, "இஜட்' பிரிவின் கீழ், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதன்படி, குண்டு துளைக்காத ஒரு கார் உட்பட, ஏழு வாகனங்கள், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. 35 வீரர்கள், இவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சமீபகாலமாக, ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நடத்திய, போராட்டங்களில், வி.கே.சிங், பங்கேற்றார். சமீபத்தில், டில்லி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்திலும், பங்கேற்றார்.இதையடுத்து, அவர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சமீபத்தில் நடத்திய ஆய்வு கூட்டத்தில், "வி.கே.சிங்கிற்கு, "இஜட்' பிரிவு பாதுகாப்பு தேவையற்றது. எனவே, அவருக்கு அளிக்கப்பட்டு வரும், பாதுகாப்பை, வாபஸ் பெறலாம்' என, முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. வி.கே.சிங், ராணுவ தளபதி பதவியிலிருந்து, ஓய்வு பெறுவதற்கு முன், வயது சான்றிதழில் குழப்பம் நிகழ்ந்து விட்டதாக கூறி, பணி நீட்டிப்பு கோரியிருந்தார். இதை, மத்திய அரசு, ஏற்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில், வி.கே.சிங்கிற்கும், மத்திய அரசுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது, குறிப்பிடத் தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிழைக்கத் தெரியாத மனிதர், இவர் டில்லியில் இருபதால் அங்குள்ள கட்சிக்கு ஜால்ரா அடித்திருந்தால் தற்போது இவர் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுனராகி இருக்கலாம், மாதம் பல ஆயிரம் சம்பளம்,இசாட் பிரிவு என்ன எ முதல் இசாட் வரை அ முதல் அக்கன்னா வரை உள்ள அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கும், வாழ்நாள் முழுவதும் பென்ஷன், ராஜ மரியாதை, செல்லும் இடமெல்லாம் இலவச வாகன வசதி, நினைத்துப் பார்க்ககூடிய முடியாத அளவிற்கு யாருமே வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத அளவிற்கு வாழ்ந்திருக்கலாம், பாவம், நேர்மை, மனசாட்சி, கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், நாட்டுப்பற்று, உங்களை நேர்வழியில் செல்லத் தூண்டுகிறது போலும், நல்ல வேலை தாங்கள் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் உள்ள சிறையில் இல்லாமல் வெளியே இருக்கிறீர்களே அதுவே பெரிசு வந்தே மாதரம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.