மதுரை : மதுரை ஆதீனம் மடத்தில், மூத்த ஆதீனத்திற்கு பதில், நெல்லையப்ப தம்பிரான் பூஜை செய்ய துவங்கியுள்ளார். நித்யானந்தாவை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நீக்கிய பின், நவ.,9ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக மதுரை ஆதீனம் நியமித்தார். இதற்காக, "தம்பிரான்' பதவியை உருவாக்கினார். அவருக்கு, மொட்டை அடிக்கப்பட்டு, பல்வேறு தீட்சைகள் அளிக்கப்பட்டன.
தினமும், மதியம் திருஞானசம்பந்தர் சன்னதியில் ஆதீனம் பூஜை செய்வது மரபு. சில நாட்களாக அவருக்கு பதில், தம்பிரான் பூஜை செய்கிறார்.
மடத்தின் தரப்பில் கூறுகையில், "தம்பிரான் இளைய ஆதீனம் அல்ல என, ஆதீனம் மறுத்து வருகிறார். இருப்பினும் தம்பிரானுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆதீன மட விவகாரம் கோர்ட்டில் நடக்கிறது. நல்ல முடிவு ஏற்படும் பட்சத்தில், தம்பிரானை இளைய ஆதீனமாக நியமிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.